பக்கம்:வாழையடி வாழை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசர் கண்ணதாசர் 141


தங்க நிலவருகில் தட்டேக் தி மீன்கள் வர
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
வந்த இரவு'

என்ற கவிஞர், 'தமிழா தமிழா' என்ற தலைப்பில் இயற்றியுள்ள கவிதை, உலகக் கவிதை அரங்கில் (Universal poem) இடம் பெறத்தக்கது, 'கடற்கரையில் அண்ணா’ என்ற கவிதையில்

'பொங்குமென் அருமை அண்ணாப் புலவனின் சிரிப்பி
னுள்ளே
சங்கமுத் தமிழும் நாட்டுச் சனத்திரள் யாவுங் தேங்கும்’

என்று கூறும் கவிஞர்,

வீசுமென் தென்றல் போலும்
வெண்ணில வொளியே போலும்
காசறு மலரின் மேவும்
கவின்கலை மணமே போலும்
பாசமும் அறிவும் சேர்க்கும்
பனிமொழி அடுக்கை வாரி
வீசினான் பலபேர் அஃது
பாட்டென விளம்பிப் போனார்!’

என்று அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லாற்றலைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்.


பெண்ணாய்ப் பிறந்தால் திராவிடர் வீட்டில்
பிறக்க வேண்டும்’

என்றும் கூறும் கவிஞர்,


விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே!
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே!’

என்று திராவிடப் பொன்னாட்டினைப் புகழ்ந்து, இசைப் பாடல் இசைத்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/143&oldid=1461310" இலிருந்து மீள்விக்கப்பட்டது