பக்கம்:வாழையடி வாழை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசு கண்ணதாசர் 145

சுற்றி இழுப்பது மீதிவழி-அதில்
        துணிந்தவன் கண்டது நீதிவழி.’

என்றும்.

'ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம்போல் ஆடிடுவோமே வாழ்நாளிலே.'

என்றும்,

'காலம் ஒருநாள் மாறும்-நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணிச் சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்'

என்றும்,

'ஊரெங்கும் தேடினேன்
        ஒருவரைக் கண்டேன்-அங்த
ஒருவரிடம் தேடினேன்
        உள்ளத்தைக் கண்டேன்
உள்ளமெங்கும் தேடினேன்
        உறவினைக் கண்டேன்-அந்த
உறவினிலே மூழ்கினேன்
        பிரிவினைக் கண்டேன்’

என்றும் வந்துளள பகுதிகளில் தத்துவக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.

'நடையழ கோர்புறம்; கற்பனை
        நயத்தழ கோர்புறம் சொற்றாெடர்
கடலலை போல்வரும் காட்சியின்
        கலையழ கோர்புறம் தமிழ்மொழி
தடையறக் குழைந்திடும் தன்மையின்
        தனியழ கோர்புறம்; இத்தகு
படையலைத் தருபவன் பாவளர்
        பாவல னாம்கண்ண தாசனே’

என்றபடி, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராய்க் கவிஞர் கண்ணதாசர் கவிதை மனம் பூத்து நிற்கிறார். வா–10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/147&oldid=1338094" இலிருந்து மீள்விக்கப்பட்டது