பக்கம்:வாழையடி வாழை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 வாழையடி வாழை

என்ற தாலாட்டுப் பாட்டு இறவாத கவிதை (immortal song) ஆகும்.

'மழைகூட ஒருநாளில் தேனாகலாம்;
மணல்கூடச் சிலநாளில் பொன்னாகலாம்: ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?'

என்ற பாடலின் கருத்தாழத்திற்காகக் கவிஞர்க்கு என்ன பரிசு தந்தாலும் தகும்!

'கண்கள் இரண்டில் ஒன்று போனால் காணமுடியாதே! நல் அழகைக் காணமுடியாதே!'

என்ற அடிகள் சோகத்தினை எதிரொலிப்பவையாகும்.

'உனக்கும் எனக்கும் உறவு காட்டி
        உலகம் சொன்னது கதையா?
நினைத்து நினைத்து மகிழும் விதத்தில்
        நேசம் கொண்டது கனவா?'

என்ற காதலின் சோககீதம் இன்னும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது! கவிஞர் கண்ணதாசர் கவிதைகளில் தத்துவம் தவறாது இடம் பெறும்.

'பிறக்கும்போதும் அழுகின்றாய்
இறக்கும்போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனுங் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே!'

என்றும்,

'வாழும் காலம் சிறியதென் றாலும்
        மனிதன் நினைப்பது கோடிவழி-அவன் மனம்போல் நடப்பது பாதிவழி-தினம்
        குழும் கவலையும் ஏக்கமும் அவனைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/146&oldid=1337848" இலிருந்து மீள்விக்கப்பட்டது