பக்கம்:வாழையடி வாழை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசு கண்ணதாசர் 143

என்று செந்தமிழ்த் தேன்மொழியாளை வருணிக்கும் கவிஞர்தம் கருத்து நயம்-பாடலின் ஒலி நயம் முதலியன பாராட்டுதற்குரியன!

'காட்டில் மரம் உறங்கும்
        கழனியிலே நெல்உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
        பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது-அதில்
        காதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது!'

என்ற பாடல்,

'கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே'

என்ற குறுந்தொகைப் பாடலையும் (157),

'கடலும் மலேயும் விசும்பும் துழாய்எம்போல் சுடர்கொள் இராப்பகல் துஞசாயால் தண்வாடாய்!'

என்ற நம்மாழ்வார் பாசுரத்தினையும்,

'மண் உறங்கும் விண்உறங்கும்
        மற்றுளவெ லாம்உறங்கும்
கண்உறங்கேன் எம்இறைவர்
        காதலால் பைங்கிளியே!'

என்ற தாயுமானவர் பாடலையும் அடியொற்றி எழுந்த தாகும்.

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
        வளரும் விழிவண்ணமே-வந்து
விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
        விளைந்த கலை அன்னமே!
'நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
        நடந்த இளந்தென்றலே!-வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு
        பொலிந்த தமிழ் மன்றமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/145&oldid=1338095" இலிருந்து மீள்விக்கப்பட்டது