பக்கம்:வாழையடி வாழை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் முடியரசர் 147

அமிழ்தம் கசக்குமோ? தென்றல் கொதிக்குமோ? அலறுகிறீர்! கதறுகிறீர்! உமக்கிது அடுக்குமோ?
(தமி)

என்று கவிஞர் கொதித்துக் கேட்கின்றார். 'தமிழ் வழங்காக் கோயிலுள்ளே தலையைக் காட்டேன்’ என்று பாடும் கவிஞர்.

ஆண்டவன் வெறுத்தாரோ-தமிழை அன்பர்கள்தாம் மறுத்தாரோ?
(ஆண்டவன்)
வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி விடுத்தொரு பிறபொழி விழைவது முறையோ?
(ஆண்ட)

நெஞ்சை உருக்கும் திருவா சகநூல்
        நினைக்க இனிக்கும் தேவா ரங்கள்
அஞ்சலி செய்திட உதவா என்றால்

        அந்தநல் ஆதிக்கம் வேண்டா இங்கே.'
(ஆண்டவன்)

என்று ஆத்திரமாக-ஆவேசமாக-எடுத்து மொழி வதைக் காண்க. தமிழ்த்தாய் எங்கும் கொலு வீற்றிருக்கவேண்டும் என்னும் கவிஞர் நல்லுள்ளத் தினை இதனால் நன்கறியலாம்.

'முன்னைப் பழம்பொருளே-வேந்தர்
        மூவர் உயிர்த்தமிழே!
கன்னற் சுவையமுதே என்றன்
        கண்ணின் மணிவிளக்கே!
என்னைப் பழிப்பதனை-நான்
        ஏதும் நினைப்பதில்லை.
உன்னைப் பழிப்பவனைப்-பகையாய்
        உள்ளம் கினைக்கு தம்மா!
தீங்குனச் சாருதென்றால்-என்றன்
        சிந்தை கொதிக்குதம்மா!
பாங்குனை மேவுதென்றால்-நெஞ்சம்
        பாய்ந்து மகிழுதம்மா!’

என்று தண்டாத தம் தமிழ்க்காதலை 'உயிர்த் தமிழே' என்ற கவிதையில் வெளியிட்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/149&oldid=1338243" இலிருந்து மீள்விக்கப்பட்டது