பக்கம்:வாழையடி வாழை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 வாழையடி வாழை

'தென்ற லுடன்பிறந்தாள்-நல்ல
        செய்கையொன் றேயறிவாள்
என்று பிறந்தவளோ-இவள்
        எத்தனை ஆண்டினளோ!’

என்று தமிழின் பழமையினைத் 'தமிழ் என் தாய்’ என்னும் பாடலில் தெரிவிக்கின்றார்.'தமிழ் என் மகள்’ என்ற கவிதை, 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!’ என்னும் பாரதியாரின் பாடலைப் பின்பற்றியதாகும்:

'பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்தாய்-அன்புப்
        பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய்
உள்ளக் கவலைகள் ஓட்ட வந்தாய்-என்றன்
        ஓவிய மேபுகழ்க் காவியமே.'

'அவளோர் அழகி-என்

ஆவி கலந்தனள் பலநாள் பழகி
(அவள்)

குவளை அவள்கண் குளிர்தேன் பார்வை குடிக்கத் தவிக்கும் விழிக்குள் நிறைந்திடும்
(அவள்)


குழலோ குரல்வாய் இசையால் பணியும்
        குயிலோ பயில மெதுவாய் அணையும் முழுவான் நிலவோ முகமோ தெரியேன்

        முகிலோ குரலோ எனுமா றறியேன்'
(அவள்)

என்று ஒலி நயமும் கருத்து நயமும் கலக்கக் கவிஞர் கவிதை புனைந்துள்ளார். அடுத்து ஆடினாள் என்ற இசைப் பாடலும் அவ்வாறே ஒலிநயம் கெழுமிச் சந்தச் சுவை நிரம்பி வர அமைந்துள்ளது.

சடையோடு மலராடச்
        சதிராடும் அவளோடு
நடைபோட முடியாமல்
        மடவன்னம் தடுமாற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/150&oldid=1338244" இலிருந்து மீள்விக்கப்பட்டது