பக்கம்:வாழையடி வாழை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் முடியரசர் 149

ஆடினாள் நாட்டிய நங்கை எனும்பொழுது, நம் கண்ணில் தோன்றும் பார்வையும், காதில் ஒலிக்கும் 'கலீர் கலீர்’ எனும் ஒலியும், கவிதையின் சிறப்பிற்குக் கட்டியங்கூறி நிற்கின்றன அல்லவா?

‘தேமலர்ச் சோலைதனில்-ஒரு நாள்
        சென்று புகுந்திருந்தேன்
மாமரக் கூட்டமங்கே-பூத்து
        மாமணம் வீசியதே’

என்னும் பாடல்,

'வான வெளிதனிலே-கவிந்தெழு
        மாலைப் பொழுதினிலே
கூனப் பிறைவரவே-சிவன்தரு
        கோலம் தெளிவேனடி'

என்ற கவிமணியின் பாடற்போக்கில் அமைந்துள்ளது. ‘இரண்டு உண்டு’ என்ற கவிதை அருமையான தத்துவ விளக்கம்; நாம் ஊன்றி உணர வேண்டிய கருத்தாகும்.

‘இன்பம் ஒரு கரை துன்பம் ஒரு கரை
இரண்டும் கொண்ட ஆறடா-வாழ்வு
இரண்டும் கொண்ட ஆறடா
இரண்டு கரையும் இல்லை என்றால்
வறண்டு போகும் பாரடா-இதைத்
தெரிந்து நெஞ்சம் தேறடா!
வரவும் உண்டு செலவும் உண்டு
வாழ்க்கை என்ற ஏட்டிலே-நம்
வாழ்க்கை என்ற ஏட்டிலே
பிறப்பும் இறப்பும் பிணைந்து தோன்றும் பெருமை யுண்டு நாட்டிலே -இதைப்
பேசு மேகுறள் பாட்டிலே!
இரவும் பகலும் இரண்டு ஒன்றாய்
இணைந்த தேஒரு நாளடா-ஒன்றாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/151&oldid=1338246" இலிருந்து மீள்விக்கப்பட்டது