பக்கம்:வாழையடி வாழை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் முடியரசர் 151

பால் நிலவுப் பெண் தனது விண் மீன் என்னும்
        பல் விரித்துச் சிரிக்கின்ற போதும், மண்மேல் கால் இழுத்துத் தவழ்கின்ற குழந்தை பேசும்
        காலத்தும் நல்லழகின் சிரிப்பைக் கண்டேன்.'

என்று கவிஞர் 'அழகின் சிரிப்பை' அழகுறப் புனைந்துள்ளார்:

'தென்றலெனும் தொட்டிலிலே எனைக்கிடத்தித்
        தேன் நுகர மலர்கள் தோறும்
சென்றிருந்து தமிழ் பாடும் வண்டொலியால்
        செவிகுளிரத் தாலே தாலோ
என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள்;
        எழுந்தழுதால் ஆறு காட்டிக்
குன்றிருந்து வீழருவி கடல்காட்டிக்
        கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி’

என்று இயற்கைத்தாயின் இனிய திறத்தினை அறுசீர் விருத்தத்தில் அமைத்து அழகாகப் பாடியுள்ளார்.

'கண்ணென்றால் காவியத்தை ஆக்கிக் காட்டும்
        காரிகையார் நடையுடையில் எழிலின் தேக்கம், மண்தின்றால் தீமைஎன அறியாப் பிள்ளை
        மழலைமொழிப் பார்வைகளில் எழிலின் ஓட்டம் விண்சென்று மீளுகின்ற பட்டம் விட்டு
        விளையாடும் சிறுசெறுவில் எழிலின் பாய்ச்சல் தண்ணென்ற புனலோடைச் சலசலப்பில்
        தகுமெழிலின் பளபளப்பு விளங்கக் கண்டேன்.'

என்று எழில் சிறந்து விளங்கும் இனிய இடங்களைச் சுட்டிக் காட்டுகின்றார் கவிஞர்.

'நிலவு' கவிஞர்கள் சொல்லோவியம் திட்டவென்றே தோன்றுகின்றதோ என்னவோ? நிலவைப் பாடாத கவிஞர் இல்லை. நிலவின் அழகையும், அந் நிலவொளியில் வாழும் மக்களின் அவல ஓவியத்தினையும் படம் பிடித்துக் கவிஞர் முடியரசர் காட்டுகின்றார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/153&oldid=1338255" இலிருந்து மீள்விக்கப்பட்டது