பக்கம்:வாழையடி வாழை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 வாழையடி வாழை

‘நிலவணங்கே? உனைக்கதிரோன் கூடுங் காலை
        நீலமுகிற் குழல்தரளக் கட்ட விழ்ந்து பொலபொலவென் றுதிர்ந்தநறு மலர்கள் தாமோ
        பூத்திருக்கும் விண்மீன்கள்? வானம் நீங்கள் நலம்நுகரும் பஞ்சணையோ? கதிரோன் எங்கே
        நடந்து விட்டான்? உதிர் மலரை மீண்டும் சேர்த்துக்
குலமாலை யாக்குதற்கு மின்னல் நாணைக்
        கொண்டுவரச் சென்றனனோ? கூறாய் தோழீ!’

கவிஞரின் கற்பனை ஆழம் கடலாழத்தினும் மிகுதி யென்பதனை இக்கவிதை உணர்த்துகின்றது. நிலவைக் கண்டவுடன் கவிஞர் நெஞ்சிலிருந்து புரட்சி எண்ணம் புறப்படுகின்றது.

'ஒருபொழுதும் வயிறார உண்ணல் காணா
        துயிர்நிற்க இரந்துண்ணும் ஏழை திங்கள் வருபொழுது அரைவயிறு மட்டும் உண்டு
        வருந்துகிற உழைப்பாளி நிறைய உண்ணும் பெருவயிற்றுப் பணக்காரன் யாவ ரேனும்
        பிழையாது நிலவளித்து மாட மீதும்
சிறுகுடிசை மீதுமொளி வீசி இன்பம்
        சேர்க்கின்ற பொதுவுடைமை ஆட்சி கண்டேன்!'

என்று பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில் புரிகின்ற முழுமதியினை எண்சீர் விருத்தத்தில் எழிலுறு பாடலில் புனைந்துள்ளார். பெண்ணின் அழகோடு போட்டியிட்டுத் தோற்றுத் தான் ஆறு கடலை நோக்கித் தன்னை மாய்த்துக் கொள்ள ஓடுகின்றதாம்! எத்தகைய கற்பனை! என்ன கருத்தாழம்! அப்பாடலைக் காண்போம்:

கரையோரம் அலைக்கையால் வாரி விட்ட
        கருமணலால் சுருள்கூந்தல் காட்டி வெள்ளை நுரைசேரும் புனல்தள்ளும் சங்கி னத்தின்
        நுண்சிலையால் பல்காட்டி, ஓடி ஓடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/154&oldid=1338376" இலிருந்து மீள்விக்கப்பட்டது