பக்கம்:வாழையடி வாழை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் முடியரசர்

153


இரைதேடும் கயல்மீனால் கண்கள் காட்டி,
இறுமாந்து செல்லுங்கால் தன்பால் செந்தா
மரையின்றி முகங்காட்ட முடியா ஆறு
மாய்வதற்குக் கடல் நோக்கி ஓடு தல்பார்!.

கவலை கெஞ்சத்தோடு கடற்கரைக்குச் செல்வோர் கடலலைகளிலும், கவிந்துநிற்கும் நீலவானின் கோலத்திலும் தம் கவலையை மறந்து களிப்புறுவர். கவலை போக்கிக் களிப்புதவும் தொண்டினைக் கடல் செய்கின்றது. காதலர் தம்மை மறந்து இன்பமுற வகை செய்கின்றது கடல். கடலுக்கும் காதலுக்குமே நெருங்கிய தொடர்பு உண்டு போலும்!

'கவலையொடு நின்பால்வந் தமர்ந்தி ருக்கும்
கடன் பட்ட மாந்தர் தம்மைத்
திவலையொடு அலையெழுப்பி அக்கவலை
தீர்க்கின்றாய் காதல் வாழ்வில்
தவழ்கின்ற இளைஞர்க்கும் மணங்கொண்டார்
தமக்குமொரு சேர இன்பம்
உவக்கின்ற படியெல்லாம் கொடுக்கின்றாய்
உவர்க்கடலே இன்னும் கேட்பாய்!’

என்று மேலும் கடலினை வருணித்துச் செல்வர் கவிஞர்.

நண்டு ஆளைக் கண்டு மறைவதனை,

இளங்காளை முன் வந்தால் நாணமுறும்
இளையவள் போல் மறையும் ஒடி’

என்ற உவமையாலும், கடல் குமுறுவதனை,

கடலுக்குள் வலைவீசி மீன்பிடிக்கக்
காதலனை வழிய னுப்பிக்
குடிலுக்குள் அவன்வரவை எதிர்நோக்கிக்
கொண்டிருக்கும் மங்கை யுள்ளம்
துடிதுடித்துக் குமுறுவதைப் போலயுேம்
துடிக்கின்றாய்! குமுறு கின்றாய்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/155&oldid=1337813" இலிருந்து மீள்விக்கப்பட்டது