பக்கம்:வாழையடி வாழை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

வாழையடி வாழை


என்று நெய்தல் நில வாழ்க்கைச் சித்திரத்தாலும் புலப் படுத்தியுள்ளார்.

பொன்னி இதழில் "பாரதிதாசன் பரம்பரை"என்ற தலைப்பில் வந்த கவிதை 'முகிலிடை நிலா' என்னும் கவிதையாகும்.


ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர் போல
அழகிழந்தாய் உனையடைந்த மேகத்தாலே’

என்று முகிலிடை முகிழ்த்த மாசினுக்குக் காரணம் கற்பிக்கின்றார்-தன்குறிப்பு ஏற்றமாகப் பாடுகின்றார் கவிஞர் முடியரசர், கவிதை ஊற்றே காதல் என்ற பாவாகத்தானே மலர்கின்றது! காதல் என்ற உணர்வு, கவிதைக்கு ஏற்ற பொருளாக நெடுங்காலமாய் இருந்து வருகின்றது.

காதலி, காதலன் மேற்கொண்டுள்ள அன்பினைக் கவினுறப் பின் வரும் பாடலில் விளக்கியுள்ளார் கவிஞர்:


அத்தான்! உமதுயிரை ஆட்கொண்ட நானினிமேற்
செத்தால் நலமென்று சிந்தித்தேன்!-பித்தாய்த்
திரிவீரே என்றெண்ணிப் பேசா திருந்தேன்!
அறியீரோ என் உண்மை அன்பு?”

தலைவி தோழியிடம் தன் தலைவன்மேல் தான் கொண்ட காதலியின் நிலையை,


காய்ச்சும் இரும்பு கவர்ந்திட்ட நீர்போல
ஆச்சுதடி என்மனம் அன்பர் அவரிடத்தே?’

என்று குறிப்பிடுகின்றாள்.

காதலர்களுக்கு ஊரார் என்றால் தம் காதற்காவிய வாழ்க்கையில் தோன்றும் கூற்றுவர்கள் என்பது பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/156&oldid=1337818" இலிருந்து மீள்விக்கப்பட்டது