பக்கம்:வாழையடி வாழை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் முடியரசர்

157


குடும்ப விளக்களித்து, வனப்புடைய கவியுலகைக் காண வழி காட்டியாகவும், திருப்பு முனையாகவும் நின்றவர் பாவேந்தர் பாரதிதாசனாரே என்று நெஞ்சில் நிறைந்த நன்றிப் பெருக்கால் உவகையுடன் மொழியும் கவிஞரின் பண்பு நலம்தான் என்னே!

'எங்கள்குலம் காக்கின்ற துயில ணங்கே!
என்னகைம்மா றுணக்களிக்க வல்லோம் நாங்கள்!'

என்று திருடன் துயிலைக் குறிப்பிடுகையில், நமக்குச் சிரிப்பும் உடன் சிந்தனையும் வருகின்றன அல்லவோ?

“குடும்பம் ஒரு காவியம்" என்பது கவிஞர் கருத்து. இதனை அவர்,

அன்பினுக்கோர் எல்லைஎனும் அன்னை தந்தை
அறிவுரைகள் எடுத்துரைக்கும் ஏடாம்! இல்லாள்
இன்பமெனும் சுவையுணர்த்தும் உள்ளந் தன்னை
ஈர்க்கின்ற மழலைமொழிப் பிள்ளை நெஞ்சத்
துன்பறுக்கும் இசைச்சுரங்கம் உடன்பிறந்த
துணைவர்களோ தோள்வலிமை காட்டும் ஏடாம்
வம்புரைக்கும் நாத்தியவள் அவலம் என்னும்
சுவையினையே வடிகட்டி உணர்த்தும் ஏடாம்
ஆதலினல் குடும்பமது சுவையால் நெஞ்சை
அள்ளுமொரு காவியமென் றறைதல் சாலும்’

என்று கவினுறக் கூறுகின்றார்.

'காணி நிலம் வேண்டும்' எனப் பராசத்தியைப் பரவிக் கேட்டார் பாரதியார். கவிஞர் முடியரசர்,

குணத்தாலும் உடலாலும் அழகு மிக்க
குமரி எனை மணந்தின்பம் கொடுக்க வேண்டும்;
கணக்கோடு மகப்பேறு நிகழ வேண்டும்;
கள்ளமிலா நண்பர்களின் தொடர்பு வேண்டும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/159&oldid=1338069" இலிருந்து மீள்விக்கப்பட்டது