பக்கம்:வாழையடி வாழை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

வாழையடி வாழை


மணத்தோடு தென்றல்வந் துலவு கின்ற
மாடியுள்ள வீடொன்று வேண்டும்! வாழ்வு
பணத்தாலே இடரின்றி நடத்தல் வேண்டும்,
பகையில்லா அருளுள்ளம் இருத்தல் வேண்டும்’

என்று 'வேண்டுவன இவையிவை' எனப் பட்டியல் தருகின்றார். இனிய வாழ்வு விழையும் எவரும் வேண்டுவன இவையே அல்லவா?

கவிஞரின் 'பூங்கொடி'க் காப்பியம் மணிமேகலையைப் பின்பற்றி எழுந்த நல்ல காப்பியமாகும்.

மதுரை மாவட்டம் பெரிய குளத்தில் (7-10-1920) பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் தமிழ்ப்புலவராய்த் தேர்ச்சி பெற்று, இப்பொழுது காரைக்குடியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றி வருகிறார்.

முன்னேற்றக் கருத்துக்கள் மிகவுடைய இக்கவிஞரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்திற்குக் கிட்டிய நல்ல சொத்துகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/160&oldid=1338150" இலிருந்து மீள்விக்கப்பட்டது