பக்கம்:வாழையடி வாழை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 வாழையடி வாழை



கன்னத்தில் குளிவிழுது-தங்க ரத்தினமே!
      கண்டுமணம் கவிஞதடி-பொன்னு ரத்தினமே!’

இக்கவிதைகளில் எல்லாம் நெஞ்சோடு நெஞ்சம் நேர் நின்று நெக்குருகிப் பேசுவது போன்ற உணர்வு கொப்பளிப்பதனைக் காணலாம்.

'பொருநைக் கரையிலே'என்ற பாடல் சந்த இன்பத் தோடு காதல் இன்பமும் தரவல்லது.


'பொருகைக் கரையில் அன்றாெருநாள்
பொன்மகள் ஒருத்தி நடந்துவந்தாள்.’

அவள் இடை துவள இரு விழியுஞ்சுழல வந்தாள்; காதலன் அருகினில் வந்து நின்றாள் கன்னி. கண்களை நம்பாது இமைத்தான் காதலன். அவளோ, அவன் பக்கத்தில் அமர்ந்து, அவனிடம் பேசாத மொழிகளை யெல்லாம் பேசினாள். அப்பொழுது,


நிலவு முகிலின் நெஞ்சில் நுழைந்தது;
      நீரில் திரைகள் நெருங்கி
      அணைந்தன;
உலவுந் தென்றல் உலகை வளைந்தது;
      ஊரெலாம் மோன உவகை சமைந்தது!’

என்று ஓர் அமைதிச் சூழ்நிலையினைத் தம் கவிதையி லேயே உருவாக்கிக் காட்டும் கவிஞரின் கவிதைத்திறம் வியத்தற்குரியது.


பின்னி முடித்த சடையினிலே-ஒரு
      பிறைபூத்து நிற்பதைப் பாரடியோ!
மின்னற் சடையினில் பிறைபூத்த வண்ணத்தைப்
     பிறைசூடி அறிந்திடக் கூறடியோ!’

என்னும் பாடலில், எதுகை மோனை முதலிய நலன்க ளெல்லாம் துலங்குகின்றன.

காதல் வெறியில் காதலன் காணுமிடமெல்லாம் அவன் நெஞ்சில் நீக்கமற நிறைந்தொளிரும் காதலியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/166&oldid=1337936" இலிருந்து மீள்விக்கப்பட்டது