பக்கம்:வாழையடி வாழை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளவேனில் 'சோமு'

165


நினைவே நிகழ்ச்சிகளாக நிழலாடுகின்றன. காண்ப வற்றில் எல்லாம் அவளே உறைவது போல் ஒரு காட்சி அவன் மனத்திரையில் பட்டுத் தெறிக்கிறது.


'கடல்அலை அவள் புகழ் முழக்கிடுமே!
      காற்றும் அவள்இசை பரப்பிடுமே! கடல்மீன் அவள் பெயர் உரைத்திடுமே
      கண்கா ணாத அத்தீவில்!'

என்று காதலெனும் தீவினிலே கட்டுண்டு கிடக்கும் காதலியைக் குறித்துக் காதலன் பாடுகின்றான்.

உவமையிலும் தத்துவத்தினை வைத்து விளக்குகிறார் கவிஞர். சான்றாகத் 'தாரகை' என்ற கவிதையில்.

'மனிதரின் உள்ளத் தாசையைப் போல
      மாமுனி வோர்மன முடிவினை ஒத்தே தனிமையில் நீல வானிலே நின்று
      தாரகை ஒன்று மின்னுதே இன்று!'

என்று மனதில் தோன்றும் ஆசை மின்னலே, விண்ணில் ஒளிரும் தாரகையோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்.

'மடிய வேண்டுமென்றால்-இந்த
      மனமும் உறுதியில்லை!
மடிய ஆசையென்றால்-அந்த
      மரணம் வருகுதில்லை!'

என்னும் கவிதை, ஓர் ஆழ்ந்த மறைபொருளை உள்ளடக்கியன்றாே ஒளிர்கின்றது! அடுத்து, கவிதைப் பெண்ணினைக் காணும் கவிஞர் நோக்கே ஒரு தனி நோக்கு என்பது,

'பூவில் சிரித்திடுவாள்-அவள்
      பூங்கொடி தன்னில் ஆடிடுவாள்
காவில் வீசும் காற்றினிலே-இன்பக்
      கண்ணிகள் பாடி உலவிடுவாள்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/167&oldid=1337988" இலிருந்து மீள்விக்கப்பட்டது