பக்கம்:வாழையடி வாழை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 வாழையடி வாழை


'கலைச்செல்வி’ என்ற கவிதையில்,


'செந்தீப் படலமாய் அந்திப் பொழுதுவான்?
     சித்திரம் தீட்டும் புலத்தினிலே-வர்ண
விசித்திரம் கூட்டும் நிலத்தினிலே-பிறகு
     வந்து முகக்கோலம் தந்து மறையும்
வளர்பிறைக் கோட்டுப் பிரபையிலே-அவள்
      களைபெறும் பாட்டுச் சுரபியடா’

என்ற பகுதியில் ஓசை இன்பம் நயமாக உளது.


'பொங்கு திரைக்கடல்
      நுங்கு நுரைக்கழல்
பொண்கிண் கிணிபுலம்ப-பரி
சங்கின் மணி சிலம்ப,-பனிக்
      கங்குல் திரைக்குள்
            கதிர்முகம்காட்டி,விண்
காலைக்கூத் தாடினாளே!-எழில்
வாலைக் கூத்தாடினானே’

என்ற பாடலில், 'அன்னையின் கூத்து' அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது; "பிறை நிலா’ எனும் கவிதை நல்ல அழகு விளக்க மாகும்.


     'அந்தி யெனும் மகள்
      வந்திருள் ஏற்ற
அகல் விளக் காகும்.நிலா!-வானப்
புகல் விளக்காகும் நிலா!

என்றும்,


      'கங்குல் மலர்களோர்
       நங்கை பறித்திடக்
கைவிரல் ஆகும் நிலா;-நளின
மெய்விரல் ஆகும் நிலா!’

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/170&oldid=1338251" இலிருந்து மீள்விக்கப்பட்டது