பக்கம்:வாழையடி வாழை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தக் கவிமணி தமிழழகனார்

169



     வந்திடும் வாழ்விலும்
     உயர்ந்திடச் சூழ்வதோ
நம்பிக்கை ஆகும்நிலா-ஈசன் அன்புக்கை ஆகும்நிலா.

என்றும் கவிஞர் 'பிறைநிலா'வினை வருணிக்கும் திறம் நெஞ்சை அள்ளும் நீர்மையதாகும்.


'பட்டுமுல்லைக் காடிருந்தும்
      பறிக்க ஆளில்லை-அதைப் பறித்தெடுத்தும் பின்னலிலே
      தொடுக்க ஆளில்லை!'

என்று தொடங்கும் 'நித்திலப் பூ' என்னும் கவிதை கற்பனை நயம் கனிந்து காணப்படுகின்றது. சந்திரோதயத்தினை,


“பூம்பாளை சீவியபின்
      பூச்சொரிய வைத்திருந்த
தாம்பாளச் சித்திரப்பொன்
      தட்டேதான் விண்மதியோ!’

என்றும், மின்னலினை,


'ஏகப் பெருவெளியில்
     ஏகாந்த வானரசி
மேகப் புழுக்கத்தால்
     மெய்விசிறும் மின்விசிறி’

என்றும் கவிஞர் கற்பனைப் புரவியேறிக் கவிதை வெறி கொண்டு பாடியுள்ளார். “காலைக் கன்னி' என்னும் கவிதை உணர்ச்சியும், கற்பனையும் வளமுறக் கொண்டிருப்பதோடு, ஒலி வடிவத் துடனும் அமைந்துள்ளது என்பதனைப் பின்வரும் கவிதைப் பகுதி கொண்டு தெளியலாம்:


     'கங்குல் இருளின்
            கதவைத் திறந்தொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/171&oldid=1338262" இலிருந்து மீள்விக்கப்பட்டது