பக்கம்:வாழையடி வாழை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

வாழையடி வாழை


கன்னி யெழுந்தாச்சு!-காலைப்
      பொன்னி வளர்ந்தாச்சு!”

காதற் கவிதையும் கவிஞர்க்குக் கை வந்தது என்பதனை 'என் காதல்’ என்ற கவிதையில் காணலாம்.


ஒட்டும் இருநெஞ்சில்
      ஊறிப் பிறக்கின்ற
மொட்டுச் சிறுபூவாய்
      முளைப்பதே என்காதல்’

என்னும் கவிதையில் காதலின் இலக்கணத்தைக் கட் டுரைக்கின்றார் கவிஞர்.


ஆசைக்குத் தூதுபோம் பைங்கிளிநீ; அந்த
     ஆசைவாய் விட்டுப்பே சாமொழிநீ: ஓசை கிளம்பாமல் கூறுவன்;நாணமே,
     ஓடிப்போ, காதலி வந்துவிட்டாள்!”

என்று, 'நாணத்தினை' நயம்படக் கிளத்துகின்றார் கவிஞர். பெட்டிக்குள் சாரைப்பாம்பு சுருண்டு கிடப்பது போல் குழலைப் பின்னலிட்டும் பின் கொண்டையிட்டுக் கட்டிளங்கன்னி கவிஞர் முன் வந்து, பல பொற்கனவு களைக் கிளறி விட்டுவிட்டாள்.


'கொண்டை முடிப்பிலோர் கொத்துமலர்-முகிற்
      கூட்டத்தின் மத்தியில் வான்பிறைபோல்
கெண்டை விழியந்தப் பின்புறத்தைக்-காட்டிக்
      கிளிறிவிட் டாள்பல பொற்கனவை!’

'காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம்' காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே’ என்றார் பாரதியார். கவிஞர் தமிழழகரோவெனில். 'காதலின் புன்னகை ஒன்று போதும் வெற்றிகளைக் குவித்திட!' என்று வீரவுரை பகர்கின்றார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/172&oldid=1338264" இலிருந்து மீள்விக்கப்பட்டது