பக்கம்:வாழையடி வாழை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தக் கவிமணி தமிழழகன்

171


எண்ணியும் ஆணை
     இடுவதுண்டோ?-ஓர்நல்
இங்கிதப் புன்னகை
     போதுமடி!
விண்ணையும் மண்ணையும்
      வென்றுவந்தே-இங்குன்
வெற்றிக் கழல்களில்
      வைப்போமடி!”

குழந்தை தரும் கொள்ளை இன்பத்தினைக் கவிஞர்.


'எல்லை அறியாதே
     எங்கோபோய்க் கொண்டிருக்கும், தொல்லைஇருள் வாழ்க்கையிலே
     தோன்றுமொளி பூங்குழந்தை!’

என்று தொடங்கும் பாடலில் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் மாணவராய் இருந்த பொழுது பாடிப் பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் புதுவையிலிருந்து நடத்திய 'குயில்' என்னும் பத்திரிகையில் வெளி’ வந்த பாட்டு'குழந்தை இன்பம்’ என்பது.


'வாடுமுள்ளம் துள்ள-இன்ப
     மழலை பேசும் சேயாம்!’

என்றும்,


‘நம்மிடத்தே கொஞ்சி-இதழ்
        நாள்ம லர்போல் பூக்கும்’

என்றும்,


பேசி டாத பேச்சை-அது
      பின்னி டாது பேசும்!”

என்றும் அச்சின்னஞ்சிறு பருவத்திலேயே கவிஞர் அற்புதமான கவிதையை ஆக்கியளித்துள்ளார். மேலும், கவிஞர் குழந்தையினை, 'கிழியின்றி வண்ண மின்றிக் கிளர்ந்த உயிரோவியம்’ என்றும், 'மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/173&oldid=1338265" இலிருந்து மீள்விக்கப்பட்டது