பக்கம்:வாழையடி வாழை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

வாழையடி வாழை

யின்றி எண்ணமின்றி முகிழ்த்த பெருங்காவியம்’ என்றும்,'பண்ணின்றி லயமின்றிப் பாடிவரும் மெல்லிசை' என்றும், விண்ணின்றி வெளியின்றி விரியு மொளிப் பேரெழில்’ என்றும், 'மழையின் றிநிலமின்றி மலர்ந்த வனப் பொன்மலர்’ என்றும், இழையின்றிப் பாவின்றி இறைவன் நெய்த 'கலைத்துகில்' என்றும், 'கடலின்றிச் சிப்பியின்றிக் கண்டெடுத்த நித்திலம்’ என்றும், 'படரின்றிக் கொம்பின்றிப் படர்ந் தோடும் மல்லிகை' என்றும், 'இடியின்றி முகி லின்றி இருள் கிழிக்கும் மின்கொடி’ என்றும், 'தூசின்றி மணியின்றித் துலங்கு மணிப் புதையல்' என்றும், 'அச்சமின்றி வார்ப்பின்றி அமைந்த வண்ணப் பதுமை’ என்றும் கவிதை புனைந் துள்ள அழகு, என்றும் நின்று வாழும் நேர்த்தியுடைய தாகும். 'குழந்தை நலம்’ எனும் இக்கவிதை, உலகின் மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்கத்தக்க தகுதி சான்றதாகும். 'பல்லக்கு' என்ற கவிதையின் பாட்டோட்டம், பண்புடன் பாராட்டிற்குரியது.


'வானமலர்க் காட்டிலே
     வைர மலர்க் காட்டிலே
தோணு மின்னல் நெளிவுபோல் துவண்டுவரும் பல்லக்கு:
      பல்லக்கொரு பல்லக்கு;
      பளிங்குவர்ணப் பல்லக்கு!
பல்லக்கம்மா பல்லக்கு!
      பவனிவரும் பல்லக்கு!
செல்லப்பிள்ளை போலவே
      செல்லுதுபார் பல்லக்கு!’

சிலேடைப் பாடல்கள் பாடுந்திறம் ஒரு சிலர்க்கே -சிறக்க அமைவதாகும். 'காளமேகப் புலவர்' இத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/174&oldid=1338271" இலிருந்து மீள்விக்கப்பட்டது