பக்கம்:வாழையடி வாழை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தக் கவிமணி தமிழழகர்

173

துறையில் தலைமை இடத்தினைப் பெறுகிறார், சிலேடைப் பாடல்கள் புனைவதென்பது ஓர் அரிய கலை. அக்கலையினை ஓரளவு கவிஞர் கையாண்டுள்ளார். எடுத்துக்காட்டிற்கு இரு பாடல்களைக் காண்போம்:


'கருத்தை யறிவிக்கும்;காவியம் பூக்கும் திருத்தலை யங்கம் திகழும்;-முறைத்தவர்தாம்
யாருமே தான்படிக்க லாகும்.
அதனாற்பெண்
ஓரவிழி பத்திரிகைக் கொப்பு!'

இவ்வெண்பா பெண்ணின் விழிக்கும் பத்திரிகைக்கும் அமைந்த 'சிலேடை'யாகும். இது போன்று திரைப் படத்திற்கும் பாம்பிற்கும் அமைந்துள்ள சிலேடைப் பாடலைக் கீழே காணலாம்:


பெட்டிக்குள் ளேசுருளும்; பின்படமே தான்காட்டும்;
மூட்டிக்கொண் டோடுவரே முன்பார்க்க;-கொட்டகையில்
ஆடும் இசையோடும்; ஆ டும்போ தேநகரும்;
பாடும் திரைப்படந்தான் பாம்பு!”

'புதிய கதிர்' என்ற பொங்கல் திருநாள் கவியரங்கக் கவிதை, புதுமை நலம் பல பூத்துக் குலுங்கு வதாகும். காலை நேரத்தில் கீழைத்திசையில் கிளர்ந் தெழும் கதிரவனும் பேரொளிப்பிழம்பினை,


நீலக் கடலரங்கில், நெய்தல் மணலரங்கில்,
கோல முகிலரங்கில், கொட்டும் பனியரங்கில்,
தாழை மடலரங்கில், தாமரை நீரரங்கில்,
கீழைக் கரையரங்கில், கிள்ளைப்பூங் காவரங்கில்,
போர்த்த இருள் ஒழியப் பொன்னாய் ஒளிசொரிய
ஆர்த்துக் கடல்வானும் ஆர முழவடிக்கச் சோலை யிளங்காற்றும் சோபனங்கள் தாம்படிக்கக்
காலை யெனும்பனியின் கண்ணாடி மாளிகையை
விட்டே எழுந்துவந்தான், விண்ணதிலே செங்கதிரோன்’

என்று எழிலுற வருணித்துள்ளார் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/175&oldid=1338273" இலிருந்து மீள்விக்கப்பட்டது