பக்கம்:வாழையடி வாழை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 வாழையடி வாழை


விண்வெளியில் இருளை நீக்கி ஒளியைப் பாய்ச்சும் கதிர்க் கடவுள், மண் வெளியில் நென்மணிக் கதிர் களைக் குலுங்கச் செய்யும்.


“விண்ணில் புதியகதிர் வீறுபெரும் போதெல்லாம்
மண்ணில் புதியகதிர் வன்பசியைப் போக்குதற்குத்
தானியமாய்,நென்மணியாய்த் தாங்கிக் குலுங்கிவிடும்!”

எனவே, இக்கதிர்க் கடவுளைப் போற்றுதல் செய்து பொன்னான வாழ்விற் பொலிவோமாக!


செம்மைப் பயிர்வளர்ப்பான் ; சீருலகைக் காத்துப்பின்
நம்மை உயிர்வளர்ப்பான், நாடுதொறும், வீடுதொறும்
பூரணமாய்ப் புத்தம் புதியகலை யோங்கவைப்பான்!
காரணமாய்ப நிற்பான், கருதுகின்ற யாவினுக்கும்!
ஆரணமு மேஅவன் ஆதலினால் போற்றிசெய்யும்!
பேருலகீர்! நாமுமவன் பேர்பாடி வாழ்த்திடுவோம்!”

இவ்வாறு, உணர்ச்சியின் உந்தலாற் பாடும் கவி-ஞரின் கவிதைகளில் கற்பனை வளமும், பாட்டின் உணர்ச்சிக்கு ஏற்ற ஓசை நயமும், இவற்றின் ஊடே சிறந்த கருத்துகளும் அமைந்து மிளிர்கின்றன. வாழையடி வாழை என வளர்ந்து வரும் கவிஞர் திருக்கூட்டத்தில் ஒருவர் சந்தக் கவிமணி தமிழழகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/176&oldid=1337873" இலிருந்து மீள்விக்கப்பட்டது