பக்கம்:வாழையடி வாழை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

‘வாழையடி வாழை’

சாதி சமய பேதங்களையும் மூடப் பழக்க வழக்கங்களையும் முறியடித்து முன்னேற்றப் பாதையில் முனைந்து சென்று புத்துலகம் காண வேண்டும் என்ற புலவர் தம் எண்ணத்தினை,

'சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினால் துரும்புபோல் அலக்க ழிப்போம் பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்: '

என்ற அடிகளிற் காணலாம்.

'எல்லோரும் ஒர் நிறை என்னும் ஒப்பற்ற உறுதிப் பாடான உண்மையினை,

ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஒரு நொடிக்குள்
ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ!

என்று அழுத்தம் திருத்தமாக —அதே நேரத்தில் ஆவேசக் குரலில் —முழங்குகின்றார் கவிஞர்.

எளியோரை வருத்தும் வலியோர் வாட்டம் நீங்கக் 'கொலை வாளினை எடடா! 'என்று கட்டளை பிறப்பிக் கின்றார் கவிஞர்; மேலும் 'செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும் இவ்வுலக மக்களிலே என்ன பேதங் கண்டாய்?' என்று எதிரிகளைப் பார்த்து எக்காளமிடுகிறார் பிரபுத்துவ முறையினைக் கண்டிக்கும் போக்கில்,

'எலியாக முயலாக இருக்கின் றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா’

—புரட்சிக் கவி

என்று பாடுகின்றார் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/98&oldid=1461273" இலிருந்து மீள்விக்கப்பட்டது