பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 போனதெல்லாம் போக இனிமேலாவது அந்தத் தாய் இல் லாக் குழந்தையைக் கொண்டுவந்து தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எத்தனையோ முயன்ருர் சுந்தரேசன். ராமசாமி அவர் கோரிக்கையை கிராகரித்துவிட்டான். குழந்தை ராஜம் மிகவும் துன்புற்ருள். துன்பத்தின் கிழவிலேயே வளர்ந்து மணப் பருவத்தையும் அடைந்தாள். அப்போது ராமசாமி தன் சொத்துப் பூர்ாவையும் சூறையாடிக் கயவர்களான கூட்டாளிகளுடன் சேர்ந்து போர்ஜரி செய்து சிறைவாசம் பெற்றிருந்தான். அவன் தகப்பனுர் சுந்தரேசனுக்குத் தகவல் அனுப்பினர். இதுதான் தக்க சமயம் என்று காமாட்சி தன் பிள்ளேயை ஊக்கினுள். அவர் கினைத்திருந்ததும் தாய் சொன்ன யோசனேயும் ஒன்றக இருக் கவே சுந்தரேசன் துரிதமாகக் காரியங்களே நடத்தத் தொடங்கினர். அடுத்த முகடர்த்தத்தில் ராஜத்திற்கும் ரமணிக்கும் கல்யாணம் என்று தீர்மானம் ஆயிற்று. ஆல்ை ரம் ைஇந்த ஏற்பாட்டிற்கு ஒப்பவில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. சுந்தரேசன் மனேவி லட்சுமிக்கு ஒரு தமையன் இருந்தார். பெரிய சம்சாரி. வாழ்ந்து கெட்டவர். ஆலுைம் பால்யத்திலே பழகிப்போன நவநாகரிக வழிகளைக் கைவிட மனமில்லாதவர். அவர் மட்டும் அப்படி அல்ல; அவர் குடும்பத்தினர் அனைவருமே அப்படித்தான். - - சுலோசன லட்சுமியினுடைய தமையன் மகள். இயற்கை யாகவே அழகுடையவள்தான். அத்துடன் நவநாகரிக அம்சங்கள் வேறு. ஹைஸ்கூல் படிப்பை முடித்தவள். அவளிடம் லட்சுமிக்கு அளவுகடந்த அன்பு, அதல்ை சின்னப் பிராயத்திலே சில் வருஷ காலம் தன்னிடம் அவளேக் கொண்டுவந்து வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது ரமணிக்கும் அவளுக்கும் விசேஷ. கட்பு ஏற்பட்டது. சுந்தரேசன், ரீநிவாசன், பாஸ்கரன் அனைவ ரிடமுமே கல்கலவென்றுதான் பழகினுள் சுலோசன. என்ருலும் ரமணியிடம் மட்டும் தனியன்பு பாராட்டி வந்தாள். அவின் அ&ன வரிலும் அழகன், புத்திசாலி என்பவற்மூேடு அவனும்:தன்னிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறன் என்பதும் மட்டும்ே. கர்ணம் அல்ல, அவள் அவனே அப்படி நேசித்ததற்கு; குளவி,புழுவைக் கொட்டிப் பக்குவப் படுத்தும் என்பார்களே, அந்த முன்ற்யிலே லட்சுமி விசேஷ் சிரத்தை எடுத்துக்கொண்டு அவனைப் பற்றி அவளிடமும் அவளேப்பற்றி அவனிடமும் ஸ்துதிபாடி அவர்கள் இருவரின் உள்ளங்களிலும் அன்பு வித்தை ஊன்றிப் பயிராக்கிப் போஷித்து'வ்ளர்த்துவிட்டதுதான் முக்கியக் காரணம்.அவர்களைத் தம்பதிகளாக்கிப் பார்க்க, தான் தீர்மானித்திருப்பதாக வாய்விட்டு வெளிப்படையாக அடிக்கடி சொல்லிக் கொண்டும் இருந்தாள்.