பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ராதாகிருஷ்னன் குறிப்பிட்டிருந்த விலாசத்தைப் பாஸ்கான் அடைந்தபோது அந்த அறை பூட்டிக் கிடந்தது. வீட்டின் சொங் தக்காரரைக் கண்டு விசாரிக்கலாம் என்ருல் விலாசம் தெரியாது. அக்கம் பக்கம் உள்ளவர்களேக் கேட்டான். ராதாகிருஷ்ணன் காலி செய்துவிட்டுப் போன பிறகு வேறு ஒருவர் அந்த இடத் திற்கு ஜாகை வந்திருப்பதாகவும் ஸ்திரீகள் யாரும் இன்றி அந்த ஆசாமி அந்த அறையிலே வசித்து வருவதாகவும் மட்டுமே தகவல் கிடைத்தது. அங்க அடையாளங்களைப் பொறுத்த வரையிலே கநிவாசனே ஒத்துத்தான் இருந்தன. அதற்குமேல் விவரம் ஒன் றும் கிடைக்கவில்லை. எப்பொழுதாவது வருவார் போவார்’ என்ருர்கள். ஒருநாள் பூராவும் அந்த அறை வாசலிலே காத்துக் கிடந்தான் பாஸ்கரன். பூரீநிவாசனையோ வேறு எவரையு மோ அவன் அங்கே காண முடியவில்ல்ை. மறுபடியும் குழப்பம் மேலிட்டது. இடையே ஒரு சந்தேகம். பூரீகி வாசன் அந்த அறையைத் தன் வாசத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டு ராஜத்தை வேறு எங்காவது கொண்டுபோய்ப் பத்திரப் படுத்தி இருப்பானே என்பதுதான் அந்தச் சந்தேகம், அதை எப்படி நிவர்த்தி செய்துகொள்வது? ஒரு வழியும் புலப்படவில்லை. குழம்பிய உள்ளத்தோடு தெருத் தெருவாய்ச் சுற்றிக்கொண் டிருந்தவன் எப்படியோ விமான கிலேயத்தின் பக்கம் போய்ச் சேர்ந்திான். தொலைவில் வரும்போது மைதானத்தில் வேகமாகக் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது அவன் பார்வை விழுந்தது. சந்தேகமே இல்லை, ஆகிவாசன்தான்! என்றது உள்ளம். பறக்கப் பறக்க ஒடினன். அவனேவிட வேகமாக ஒடிக்கொண் டிருந்த நிவாசன் புறப்படத் தயாராக இருந்த ஆகாய விமா னத்தை அடைந்து அதில்ஏறிஉட்கார்ந்துகொண்டான். பாஸ்கரன் சமீபிப்பதற்குள் விமானம் ஆர்ப்பாட்டத்துடன் புறப்பட்டுவிட்டது. விசாரித்ததில் அது சென்னே செல்கிறது என்று தெரிந்தது. 'க'கிவாசன் பம்பாய்க்கு ஏன் வந்தான், ஏன் சென்னைக்குப் போகிருன்? ராஜம் எங்கே? விடைகாணுத புதிரில் சிக்கித் திக்கு முக்காடிக்கொண்டிருந்த பாஸ்கரனின் தோளில் யாரோ கை வைத்ததும் சட்டென்று திரும்பிப் பார்த்தான். சுந்தரேசன் நின்றுகொண்டிருந்தார். மறு சந்திப்பு. -ன்பத்தில் இன்பம். இன்பத்தில் துன்பம் என்பதுபோலக் குழப்பமான சந்தர்ப்பங்களிலே சற்றும் எதிர்பாராத விதம் திடீர் திடீர் என்று சுந்தேரன் தன் எகிரில் பிரசன்னமாவது பாஸ்கர