பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சமாதானமாகச் சில வார்த்தைகள் பேசவேண்டும், தன் நன்றி யைத் தெரிவித்துக்கொள்ளஎேண்டும் என்று எண்ணிள்ை. "நான் அப்படியெல்லாம் ஒன்றும் நினைக்கவில்லை. சகஜ மாக ஏதோ கேட்டேன். அது உங்களுக்குத் தவருகப்பட்டுவிட் டாற்போல் இருக்கிறது. பிறந்த வீட்டிலே கூட எனக்கு இத் தனே எல்லாம் நடவாது. உடன்பிறந்த சகோதரர்கட்ட இவ்வளவு அக்கறையோடு எல்லாம் செய்யமாட்டார்...' அச்சுதனின் மனம் குளிர்ந்தது. அதன் அறிகுறியாக இனி மையான சொற்கள் வெளிப்பட்டன. அவளுடைய வரலாற்றை அறிய முயன்று சில கேள்விகள் கேட்டான். அவள் தங்கு தடை இன்றிப் பொய் புகன்ருள். தன்னைப் போன்ற ஒரு பெண்ணுன சுலோசவிைடமே மனம் போனபடி பொய்யுரைத்த அவளுக்கு முன்பின் அறியாத ஆடவனிடம் அந்த இடத்திலே ஆந்த நேரத் திலே உண்மையை விவரிக்க எப்படி மனம் வரும்? தன் பல ஹீனங்களே எல்லாம் அறவே மறைத்து என்ன என்னவோ சொல்லி வைத்தாள். அச்சுதன் அனேத்தையும் கம்பத்தான் செய் தான் என்ருலும் தன் உள்ளக் கிடக்கையை ஜாடையாக அறிவித் தான். அவளும் அதை உணர்ந்துகொண்டாள். 'என் வசம் உள்ள இரண்டு உயிர்களைத் தீர்த்துக் கட்டியாவது என் கற்பைக் காப்பாற்றிக்கொள்வேனே தவிர ஒருபோதும் கற்பு நெறி பிறழ மாட்டேன்’ என்று மனசோடு சொல்விக்கொண்டாள். பேச்சி லும் அந்த உறுதி கலந்து ஒலித்தது. அச்சுதன் வஞ்சகம், பல்வக் தம் இரண்டையும் தவிர வேறுவழி இல்லை என்று தீர்மானித்தான். 'சரி நேரம் ஆகிறது. அப்படியே படுத்துச் சற்றுத் தூங்கு; ரெயில் வருகிறபோது எழுப்புகிறேன்' என்று சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான். அவளுக்குத் தூக்கம் வருமா? வந்தாலும் துரங்க விரும்பு வாளா? அதுவும் அந்த் மனிதனின் மனோபாவத்தை அறிந்து கொண்ட பின்? உடல் அசதி எத்தனையோ இருந்தும் அனைத்தை யும் சகித்துக்கொண்டு குற்றுக்கல்லேப்போல உட்கார்ந்திருந்தாள். அப்படி எத்தனே நேரம் சாத்தியம்? நித்திரா தேவி அவளே அணுகினுள். அன்போடு அணேத்துக்கொண்டாள். அவள் உத றித் தள்ளினுள். இருவருக்கும் பலம்ான போராட்டம். இறுதி வெற்றி கித்திராதேவிக்குத்தான். ராஜம் சுருண்டு படுத்தாள். - நடு கிசி. ராஜம் அயர்ந்த கித்திரையில் இருந்தாள். அச்சுதன் அவளைப் பார்த்துப் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக்கொண்டிருக் தான். வெட்டிச் சாய்த்த வாழைமரம் போன்று சுவரோாம் படுத் திருந்த அவளுடைய மினுமினுவென்றசரீரத்தின் தோற்றம்.அவன்ே 98ు கொள்ளாமல் தவிக்கச் செய்தது. மெல்ல எழுந்து அருகே