பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105. மறுநாட்கால அருணுேதயத்திற்குப் புகஆர்ன்ர ஆடைந்த பாஸ்கரன் ருக்மிணியின் பிறந்த வீட்டை அடைந்து அவரேக்சிச் கித்தான். துக்கப் பிரச்னம்.ஆன பிறகு அவளே கேட்டாள்.

பட்டணத்திலிருந்துதானே வருகிறீர்கள்? சின்ன அண்ணு. வைப் பார்த்தீர்கள்? முந்தாநாளே கடிதம் போட்டிருக்கிறது. நேற்று இங்கிருந்து ஒருவர் பட்டணத்திற்குப் போர்ை. ஆவரிமும் சொல்லி அனுப்பி இருக்கிறது. நான் கிடீர் என்று,கிளம்பி வந்ததால் அங்கே ஒரு ஏற்பாடும் செய்துவிட்டு வர முடிய்வில்லை, ராஜத்தை ஒண்டிய்ாக விட்டு வந்தோமே என்ற் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல் வேளையாக இங்கே அம்மாவின் உடல் நிலையில் சற்றுத் தெளிவு ஏற்பட்டிருந்தது. அதினுல் உங்கள் அண் குவை உடனேயே ஊருக்குத் திருப்பி அனுப்பி வைத்தேன். அப்புறங்தான் ராஜத்தைப் பற்றின கவல்ே சிறிது குறைந்தது. கிழப் பிராணன் என்பதற்கு ஏற்ப, தெளிவுகண்ட அம்மாவின் உடம்பு மறுபடியும் மாறுதல் அடைந்தது. அவ்வளவுதான். அவள் போய்விட்டாள். இப்போது மறுபடியும் ராஜத்தின் கவல்ே பல மாகப் பிடித்துக்கொண்டது. எப்படியும் அண்ணு இங்கே வங்தே தீரவேண்டும். மறுபடியும் அவளைப் பட்டண வாசத்திலே தனி வீட்டிலே ஒண்டியாக விட்டுவரவாவது என்கிற யோசன. இங்கே அழைத்து வரலாம் என்ருல் ஊர் நன்ருக இல்லே. வைசூரியின் ஆர்ப்பாட்டம் கடுமையாக இருக்கிறது. நமக்குத்தான் தீர்ாது. அந்தக் குழந்தையை வேறு எதற்காக இங்கே அழைத்து வரவேண். டும் என்று அவளேக் கொண்டுபோய்க் கிருஷ்ன்ாாஜபுரத்தில்ே விட்டு வரும்படி சொல்வி அனுப்பினேன். கடிதத்திலும் விவர மாக எழுதி இருக்கிறேன். அதுதான் உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமோ என்று கேட்டேன்." .

அவள் பாட்டுக்குச் சடசடவென்று சொல்விக்கொண்டே போய் மேற்கூறிய இடத்திலே நிறுத்தினுள். எடுத்த எடுப்பிலேயே விஷயத்தைப் புரிந்துகொண்டுவிட்ட பாஸ்கரனின் மனம் ராஜத் இன் நினேவில்ே ஒன்றிப்போய்விட்டபடியால் அஆள் தொடர்ந்து சொல்விக்கொண்டு போனதை யெல்ல்ாம் கவனிக்கவே இல்ல்ே. அவள் பேசி கிறுத்தினதும் ஒப்புக்குத் தலையை ஆட்டி வைத்தான். அவ்வளவுதான். அதற்குமேல் அங்கே அவனுக்கு என்ன வேலை? வந்த வழியே கிரும்பினுன். இரண்டு இடங்கள்-ஒன்று புகலூர்; பார்த்தாகிவிட்டது. அடுத்தது கிருஷ்ணராஜபுரம்; அவன் அந்த ஊரை நோக்கிப் பிரயாணமானன். விவரிப்பில் அடங்காத மன வேதனேயுடன் கிருஷ்ணராஜபுரத்தை அடைந்தபோது அங்கே கிடைத்த தகவல்களைக் கேட்டு அப்படியே அசந்துபோனன்.