பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝莓 வாழ்க்கைச் சுவடுகள் கிராம ஊழியன் எழுத்தாளர்கள் பத்திரிகைக்காரர்கள் இலக்கிய அன்பர்களின் கவனத்தையும் நன்மதிப்பையும் பெறும் விதத்தில் விஷயச் சிறப்புடன் வளர்ந்து வந்தது. கு.ப.ரா.வின் மரணத்துக்குப் பிறகு, கும்பகோணம் எழுத்தாளர்கள் நீடித்த ஒத்துழைப்பு தர மனம் கொள்ளவில்லை. இதுவரை கு.ப.ரா.வுக்காக எழுதிக் கொடுத்தோம் இனியும் கம்மா எதற்கு எழுதவேண்டும் என்று அவர்களில் சிலர் கருதினார்கள். எழுத்தாளர்களுக்குச் சன்மானம் அளிக்கக்கூடிய நிலையில் பத்திரிகை இல்லை. எம்.வி. வெங்கட்ராம் தொடர்ந்து எழுதி உதவிக் கொண்டிருந்தார். தி. ஜானகிராமனின் முதல் நாவலான 'அமிர்தம் தொடர்கதையாக வளர்ந்து முற்றுப் பெற்றது. பத்திரிகை, காலம் தவறாது. மாதம் இருமுறை, வர வேண்டியிருந்தது. எனவே, நான் பல புனைபெயர்களில் அதிகம் எழுத வேண்டியதாயிற்று. நையாண்டி பாரதியாக நான் எழுதிய கட்டுரைகள் புதுமையாக இருந்தன. கட்டுப்பாடற்றுத் தாராளமாகச் சொடுக்கப்பெற்ற கிண்டல்களும் நையாண்டிகளும் அவற்றில் இடம் பெற்றன. அதனால் அவை பலரது பேச்சுக்கும் பொருளாயின. நையாண்டி பாரதி யார்?' என்று பலரும் கேட்கலாயினர். அதனால் இவர்தான் நையாண்டி பாரதி என்று ஓர் இதழில் போட்டோ அச்சிடப்பட்டது. அந்த சமயத்தில்தான் பாரதிதாசன் துறையூருக்கு வந்தார். திருச்சிக்கு வந்த கவிஞரைத் துறையூர் அன்பர்கள் தங்கள் ஊருக்கும் அழைத்து வந்தார்கள். அவெர.கி. ரெட்டியாரின் அழைப்பை ஏற்று அவர் கிராம ஊழியன் அலுவலகத்துக்கு வந்தார். பாரதியார் பாடல்களோடு பாரதிதாசன் பாடல்களையும் பாடிப் பரப்பி வந்த திருலோக சீதாராம் இச்சமயம் துறையூரில் இல்லை. மலருக்கு விளம்பரம் சேகரிப்பதற்காகக் கோயம்புத்தூர் போயிருந்தார். கிராம ஊழியனில் உவமை நயம் என்ற தலைப்பில் ஒவ்வொரு கவிஞரின் உவமைகள் பற்றிய கட்டுரைகள் பிரசுரம் பெற்றன. பாரதியார் உவமைகள் பற்றித் திருலோகம் எழுதியிருந்தார். அடுத்துப் பாரதிதாசன் உவமைநயம் குறித்து நான் பல கட்டுரைகள் எழுதினேன். எழுத்துக்கள் மூலம் பெயர் அதிகம் பரவியிருந்ததால், வல்லிக்கண்ணன் என்றால் பெரிய ஆள் என்றே பலரும் எண்ணினர். ஆளை நேரில் பார்த்ததும் நம்புவதற்குத் தயங்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வருவது.