பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ##3 எழுத்துமலர்களை நீங்கள் வகைவகையாகக் கோர்த்து. இந்த இதழில் பத்திரப்படுத்துகிறீர்கள் என்று மகிழ்ச்சியோடு சொன்னார் இதய ஒலி கையெழுத்துப் பத்திரிகையின் பெருமை சிறிது சிறிதாக வெளியே பரவிவந்தது. பெரும்அளவில் தெரியவருவதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. திருச்சியிலும் அதன் அருகில் உள்ள பல ஊர்களிலும் பல இளைஞர்கள் கையெழுத்துப் பத்திரிகையை ஆர்வத்துடன் எழுதிக் கொண்டிருந்தார்கள். பூநீரங்கத்தில் மரா. சுப்பிரமணியன் என்ற ஆரம்ப எழுத்தாளர் ஒட்டல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவர் கையெழுத்துப்பத்திரிகையும் நடத்திவந்தார். அவருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் ஓர் எண்ணம் ஏற்பட்டது. திருச்சிமாவட்டத்தில் வளர்கிற கையெழுத்துப்பத்திரிகைகள் பலவற்றையும் ஒரே இடத்தில் சேர்த்து ஒரு கண்காட்சி நடத்துவது. அத்துடன் ‘கையெழுத்துப்பத்திரிகை மாநாடு'ம் நடத்தலாமே என்று யோசித்தார்கள். திட்டம் தீட்டினார்கள். என்னைத் தேடி வந்து எனது கருத்தையும் கேட்டார்கள். பணச் செலவை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. அவர்கள் யோசனையை நான் வரவேற்றேன். செய்ய வேண்டியதுதான் என ஆதரித்தேன். வரவேற்புக் குழுவின் தலைவராக நான் இருக்கவேண்டும் என்றும் கையெழுத்துப் பத்திரிகைகளின் காட்சியில் எனது இதயஒலியும் இடம் பெற வேண்டும் என்று மரா. சுப்பிரமணியன் வேண்டினார். நானும் இசைவு தெரிவித்தேன். - கையெழுத்துப்பத்திரிகையாளர் மாநாடு பூநீரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது 1946இல் சென்னையில் இருந்து பாரததேவி நாளிதழ் ஆசிரியர் கே. அருணாசலமும், ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்த 'நாடோடி வெங்கட்ராமனும் மாநாட்டுக்காக வந்திருந்தார்கள். நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். பாரத தேவி அருணாசலம் தலைமை உரை. நாடோடி வாழ்த்துரை வழங்கினார். நாகப்பட்டினம் வக்கீல் சூரியமூர்த்தி, ந. பிச்சமூர்த்தி, சிட்டி சுந்தரராஜன் முதலியோரும் வாழ்த்திப் பேசினர். மற்றொரு மணிக்கொடி எழுத்தாளர் ஆன சி.சு. செல்லப்பா, வத்தலக்குண்டிலிருந்து திருச்சிக்கு வந்திருந்தார், நண்பர்களைப் பார்த்துப் பேசுவதற்காக, சிட்டியின் அழைப்பின் பேரில் அவரும் மாநாட்டுக்கு வந்திருந்தார். மாநாடு பெரும் வெற்றியாக மதிக்கப்பட்டது. ஐம்பதுக்கும் அதிகமான கையெழுத்து இதழ்கள் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. சென்னைப் பத்திரிகைகள் இந்த மாநாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகள் வெளியிட்டிருந்தன.