பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 133 நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு மெதுமெதுவாக அனைத்துத் துறைகளிலும், பணம் பண்ணும் ஆசையும் லாபநோக்கும் கொண்டவர்கள் பெருகலானார்கள். பத்திரிகைத்துறையும், புத்தகவெளியீட்டுத் துறையும், இதர தொழில் துறைகளைப் போல, பணம் சம்பாதிக்கக்கூடிய களங்களாக அமையமுடியும் என்ற எண்ணம் உடையவர்கள் நம்பிக்கையுடன் புகுந்து செயல்படலானார்கள். நிறையப் பணத்தை ஈடுபடுத்தி, இத்துறைகளையும் உற்பத்தி சாதனங்களாக்கி, வாசகர்களை நுகர்வோர் ஆக மதித்து, தங்கள் சரக்குகளை அவர்கள் விரும்பி வாங்கும்படி செய்வதற்கான உத்திகள் பலவற்றையும் கையாண்டு வெற்றி காண முற்பட்டார்கள். அவர்களுக்கு லட்சியங்கள் பெரிதல்ல லட்சங்களே முக்கியமாகத் தோன்றின. லட்சக்கணக்கில் பத்திரிகைகளை அச்சிட்டுப் பரப்பி, லாபம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்த அவர்கள் மக்களின் ஒழுக்கத்தைச் சிதைப்பது பற்றியும், பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிவகுப்பது பற்றியும் கவலைப்படவில்லை. திரைப்படங்களும், வர்த்தக நோக்குப் பத்திரிகைகளும் இவ்வகையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாயின. முன்பு நல்லமுறையில் மொழிப்பணியும் இலக்கியப்பணியும் ஆற்றிக் கொண்டிருந்த பத்திரிகைகள் கூட, பத்திரிகை உலகத்தில் போட்டி போட்டு வாழ்வதற்காகத் தங்கள் போக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் எனக் கருதி அவ்வாறே செயல்பட்டன. 'மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக் கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில், பழக்கமுறையாகிவிட்ட ரீதியிலேயே கருத்துக்களையும் அலுக்கும்படியாக, ஒரே விதமாகக் கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில், மக்களுக்கு இன்னின்னவைகளைக் கொடுத்துப் படிக்கச் செய்ய வேண்டும், புதுப்புது விதமாக நோக்கும் பார்வையும் கொண்டு வெளியிட்டுச் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு ஒரு மொழிஇலக்கியத்துக்கு அவசியமானது' எனக் கருதியவர்களில் சி.சு. செல்லப்பாவும் ஒருவராவார், 'முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை, இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கிற முயற்சிதான் என்று நன்கு உணர்ந்தே அவர் எழுத்து பத்திரிகையைத் தொடங்கினார். - அந்தப் பெயரைப் பரிகசித்தவர்களுக்கு அவர் சூடாகப் பதிலளித்தார். 'ஆங்கிலத்தில் ரைட்டிங், நியூரைட்டிங் என்றெல்லாம் பத்திரிகைகளுக்குப் பெயர் இருக்கிறதே. தமிழில் எழுத்து என்று பெயர் வைத்தால் என்ன கெட்டுப் போகும்?' என்று அவர் வாதித்தார். - பெயர் வைப்பதிலும் அவர் புதுமை செய்து தனிவழி வகுத்தார் என்று சொல்ல வேண்டும். அவருக்குப் பிறகு பத்திரிகை தொடங்க முற்பட்டவ்ர்கள்