பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வாழ்க்கைச் சுவடுகள் அவரும் கதைகள் எழுதினார். பிற்காலத்தில், நாவல்கள் படைத்தார். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று எழுதிக்கொண்டிருந்தார். புத்தகங்கள் பிரசுரித்தார். சில சிற்றிதழ்கள் வெளியிட்டார். புதுமை நாட்டமும் செயல்வேகமும் கொண்டிருந்தார். அவர் தம் நண்பர் முருகேசனுடன் ராஜவல்லிபுரம் வந்தார். முருகேசன் மனைவியும் உடன் வந்திருந்தார். வீட்டில் அமர்ந்து பல மணிநேரம் பேசிய பிறகு ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே மணலில் அமர்ந்து பேசி மகிழ்ந்தோம். பிறகு செப்பறை நடராஜர் கோயிலுக்குப் போனோம். இரவு வந்ததும் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். நினைவில் ஆழமாகப் பதிந்திருக்கும் இனிய நினைவுகளில் அந்த நாளும் ஒன்று ஆகும். 27 எனது ஒத்துழைப்பை அதிகம் பெற்று என் எழுத்துக்களை மிகுதியாக வெளியிட்டு என் வளர்ச்சிக்கு வழி செய்த மற்றொரு முக்கியமான பத்திரிகை தீபம் இலக்கிய இதழ் ஆகும் தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும், எழுத்தாற்றலும் கற்பனை வளமும், இலட்சிய தாகமும் கடுமையான உழைப்பும், சுயசிந்தனைத்திறமும் பெற்றிருந்த நா. பார்த்தசாரதி சுயமுயற்சியாக 'தீபம்' இலக்கிய இதழைத் தொடங்கினார். 1965 ஏப்ரல் மாதம். இலக்கியவாதிகள் பலரது பக்கபலமும் அவருக்கக் கிட்டியது. எனினும், பத்திரிகை பொருளாதார ரீதியில் வெற்றிபெறவில்லை. இலக்கிய இதழை விடாது நடத்துவது மிகச் சிரமமான செயலாகவே இருந்தது. நா.பா. மனம் சோரவில்லை. எதிர்ப்பட்ட கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சகித்துக்கொண்டு, கடுமையாக உழைத்து தியாகங்கள் பல செய்து 'தீபம்' இதழை இலட்சிய நோக்குடனேயே வளர்த்தார். விஷயங்களில் பல புதுமைகள் செய்தார். பல பத்திரிகைகளும் இலக்கிய இதழ்கள் கூட தங்கள் வளர்ச்சிக்காக, கதைச்சுவை நிறைந்த தொடர்கதைகளை வெளியிடுவது இதழியல் மரபாக இருந்து வருகிறது. வெகு காலமாக நா.பா. இதில் ஒரு மாறுதல் செய்தார். தடம் பதித்த இலக்கிய இதழ்களின் வரலாற்றைத் தொடர்கட்டுரைகளாகப் பிரசுரிக்கத் துணிந்தார். அதன்படி மணிக்கொடி சிறுகதைப் பத்திரிகைகளின் ஆசிரியராகி இருந்து தமிழ்ச் சிறுகதைக்கு வளமும் இலக்கியமதிப்பும் சேர்வதற்கு வகை செய்த பி.எஸ். ராமையாவை மணிக்கொடிக்காலம்' எனும் கட்டுரைத் தொடரை எழுதும்படி செய்தார். அத்தொடர் நிறைவுற்றதும் சரஸ்வதி பத்திரிகை பற்றி எழுதும்படி நா.பா. என்னைக் கேட்டுக்கொண்டார். நான் எழுதுவது எப்படி அமையுமோ