பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#82 வாழ்க்கைச் சுவடுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். என்னை அவர் ஊருக்கு வரும்படி செய்தார். பூநீவில்லிபுத்துருக்கு அருகில் உள்ளது அவரது ஊர். - மற்றொரு இனிய நண்பர் வீர வேலுசாமி பூரீவில்லிபுத்தூர் வழியாகச் செல்லவேண்டிய இன்னொரு கிராமம் அவருடையது. பி. ராமச்சந்திரபுரம் என்று பெயர். ஆனால் 'செந்நாக்குளம்' என்றுதான் மக்களால் அழைக்கப்படுகிறது. வேலுசாமியும் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்தான். ஆயினும், அரசு மாணவர் விடுதிக் காப்பாளராகப் பணியாற்றினார். அருமையான சிறுகதைகள் பல எழுதினார். அவை நிறங்கள் என்ற தொகுப்பாக வந்தன. சிறுவர் கதைகளும் எழுதியுள்ளார். பிறகு ஏனோ எதுவும் எழுதுவதில்லை. எழுத்தாற்றல் பெற்ற சிலபேர் ஒருகாலகட்டத்துக்குப் பிறகு ஏதோ சொந்தக் காரணங்களினால் எழுதாமலே இருந்துவிடுகிறார்கள். ஆனாலும், நல்ல புத்தகங்கள் படிப்பதை விட்டுவிடுவதில்லை. இதைப் பாராட்ட வேண்டும். என்னிடம் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டுள்ள இனிய நண்பர்களில் வீர. வேலுசாமியும் ஒருவர். அவருடைய ஊருக்கு என்னை அநேக முறைகள் வரவழைத்துள்ளார் அவர். அது அழகான கிராமம். ஒரு காலத்தில் புகழ்வாய்ந்த காங்கிரஸ் தலைவராக விளங்கிய கிருஷ்ணசாமி நாயுடுவின் ஊர் அது. அவர் ஊர்ப்பற்றுதலோடு அந்த ஊரைப் பண்படுத்திப் பேணி ஒரு மாதிரி கிராமம்' (மாடல் வில்லேஜ் ஆக அமைத்திருந்தார். ஊர் மக்களும் அதன் பெருமையைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டினார்கள். "வானம் பார்த்த கரிசல் காட்டு பூமி அது மழை பெய்து கண்மாய் பெருகினால் விவசாயம் செழிப்பாக நடைபெறும் வறட்சிக் காலங்களில் மக்கள் பாடு வெகு சிரமம்தான். பெரும்பாலும் மழை பொய்த்து விடுகிறது. மழையை எதிர்பார்த்து, விரக்தியோடும் வேதனையோடும் முணுமுணுத்துக் கொண்டு, விவசாய வாழ்க்கையை விட்டுவிடலாமா என்ற நினைப்போடும் விடமுடியாத வாழ்நிலையோடும் மண்ணை நம்பி நாளோட்டுகிற மக்கள் வசிக்கிற ஊர்களில் அதுவும் ஒன்று. நான் மேற்கொண்ட நீண்ட பிரயாணம் கல்கத்தா போய் வந்தது ஆகும். அது 1977இல் நிகழ்ந்தது. அவ் வருடம் நான் ராஜவல்லிபுரத்தில் பல மாதங்கள் போக்கினேன். நவம்பர் மாதம் சென்னை செல்லலாம் என்று எண்ணினேன். அச் சமயம் தீபாவளி நவம்பரில் வந்தது. தீபாவளி இரவில் ரயில் பயணம் செய்யலாமே என நினைத்தேன். வருவதே வருகிறாய். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்னதாக வரலாமே எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று என்