பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£383 வாழ்க்கைச் சுவடுகள் அதிகம் படித்தவன் என்னுடைய ரசனையில் ஆதாரத்தில் தீர்மானித்துக் சொல்கிறேன். அதை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்றார். இந்தப் போக்கு எழுத்தாளர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே பலரும் கநா.சு வைக் குறை கூறினார்கள். மேலும், அவர் பெயர்பெற்றிருந்த அநேக எழுத்தாளர்களை எழுத்தாளர்களாகவும் அவர்களது எழுத்துக்களைத் தரமான எழுத்துக்களாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை எல்லாம் பத்திரிகை எழுத்துக்கள்; அவை இலக்கியத் தரம் உடையன ஆகா என்று தெரிவித்தார். இதனாலும் எழுத்தாளர்களது வெறுப்பை அவர் அதிகம் பெற்றார். க.நா.சு. விமர்சனத்தில் ஈடுபட்டதனால், அவருடைய சாதனைகள் உரிய மதிப்பைப் பெறாது போயின. அவை புறம்தள்ளப்பட்டன. அவர் நல்ல சிறுகதை எழுத்தாளர் சிறந்த நாவல்கள் எழுதியிருப்பவர் மொழிபெயர்ப்புகள் மூலம் அரும்பணி ஆற்றியவர் என்பனவெல்லாம் மறக்கப்பட்டன. விமர்சனம் என்று இஷ்டம் போல் கருத்துக்களை எழுதிக் கொண்டிருப்பவர் என்ற அபிப்பிராயமே பத்திரிகை உலகத்தில் மேலோங்கியது. க.நா. சுப்ரமண்யம் உலகமொழிகளில் சிறந்த நாவல்கள் சிறவற்றை, ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியிருக்கிறார். நோபல் பரிசு பெற்ற நாவல்கள் சிலவற்றை மொழி பெயர்த்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார். உலக இலக்கியங்கள் பற்றியும், இலக்கியப் படைப்பாளிகள் பற்றியும் அறிமுகக் கட்டுரைகள் எழுதி நற்பணி புரிந்திருக்கிறார். அதே போல, தமிழில் இருந்தும் சில நாவல்களையும் சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தியாவின் இதர மொழி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் அவர் செய்துள்ளார். மேலும், சிலப்பதிகாரக் காவியத்தையும் திருக்குறள் நூலையும் ஆங்கிலப்படுத்திப் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார். க.நா. சுப்பிரமண்யத்தின் தாக்கம் பெற்றுச் சி.சு. செல்லப்பாவும் இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட்டார். க.நா.சு விமர்சனப் பாணியை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத செல்லப்பா தமக்கெனத் தனி முறை வகுத்துக் கொண்டார். ஆழ்ந்த ஆய்வுமுறையில் பகுப்பாய்வு விமர்சனப் பாங்கு அவருடையது (ANALYTICAL CRITICISM). இம் முறைப்படி லா.ச. ராமாமிர்தம், மெளனி, புதுமைப்பித்தன் ஆகியோரது சிறுகதைகளை ஆய்வுசெய்து ஆழ்ந்த கட்டுரைகள் எழுதினார். சில நாவல்கள் குறித்தும் விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். இலக்கிய விமர்சனத்தை வளர்ப்பதற்கென்றே எழுத்து' பத்திரிகையைப் பன்னிரண்டு வருடங்கள் நடத்தினார். சிசு, செல்லப்பாவின் இலக்கிய நோக்கிலும் சில குறைகள் இருந்தன. மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பிறகு தமிழில் சிறந்த சிறுகதைகள்