பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் リ வேண்டும் என்ற நோக்குடன் திட்டங்களிட்டு ஆவன செய்வதில் ஆர்வம் காட்டுவது வழக்கமாக இருந்தது. ஒரிசா மாநில அரசும் சிறப்பான முறையில் விழா ஏற்பாடுகள் செய்திருந்தது. அம் மாநிலத்துக்குரிய கலை கலாச்சார நிகழ்ச்சிகள் முதலியன நடத்திக் காட்டப்பெற்றன. அத்துடன், அம் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் முக்கிய இடங்களைப் பார்த்து மகிழ்வதற்கான சுற்றுலா வசதிகளையும் செய்து தந்தது அரசு, பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பிறகு, பூரி நகருக்கு அழைத்துச் சென்று ஜெகநாதர் ஆலயம், அழகான கடற்கரை, அப்புறம் கோனார்க் சூரியன் கோயில் ஆகியவற்றைக் கண்டு களிக்கத் துணைபுரிந்தார்கள். புவனேஸ்வரத்திலேயே நூற்றுக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அவற்றின் கோபுர அமைப்புகள் தனிரகமானவை. முக்கியமான சில கோவில்களைப் பார்த்தோம். புவனேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு ரயில் பயணத்தை மேற்கொள்ளது. நாம் கல்கத்தா போய் அங்கிருந்து சென்னை செல்லவன: கல்கத்தாவில் தமிழ்ச்சங்கம் ஒரு பாராட்டு விழா நடத்த விரும்புகிறது என்று நா.பா. கூறினார். அதன்படி நாங்கள் இருவரும் கல்கத்தா போனோம்.

బీ, நான் சாகித்ய அகாதமிப் பரிசு பெற்றதற்காக எனக்கு அளிக்கப்பட்ட முதலாவது பாராட்டு விழா கல்கத்தாவில்தான் நடந்தது. அம் மாநகரில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு நாங்கள் சென்னைக்குப் பயண்மானோம். சென்னை சேர்ந்த பிறகு பாராட்டு விழாக்கள் தொடர்ந்தன. சென்னையில் சில விழாக்கள். பின்னர் கோயம்புத்துர், திருச்சி-துறையூர், மதுரை, திருநெல்வேலி, ஒட்டப்பிடாரம், ராஜவல்லிபுரம் என்ற பல இடங்களிலும் விழா ஏற்பாடு செய்து பாராட்டி மகிழ்ந்தார்கள். துறையூரில், முன்பு கிராம ஊழியன் காலத்தில் என்னுடன் பழகிய அச்சுத் தொழிலாளர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர். சிறு அளவில் ஒரு சிறப்புமலர் கூடத் தயாரித்திருந்தார்கள். மதுரையில் எழுத்தாளர் நண்டர் கர்ணன் சிறப்பான முறையில் விழா நடத்தினார். கர்ணன் நல்ல சிறு கதை எழுத்தாளர். அவர் எழுதிய கதைகள் ஆனந்த விகடன், அமுதசுரபி, தாமரை போன்ற இதழ்களில் அதிகம் வெளிவந்துள்ளன. அவற்றை அவரே புத்தகங்களாக வெளியிட்டார். புரட்சி வீரர் பகத்சிங், அன்னை கஸ்தூரிபாய் ஆகியோர் வரலாற்றையும் விரிவாக எழுதினார். அவை பத்திரிகைகளில் தொடராக வந்து பின்னர் புத்தகங்களாகவும் பிரசுரமாயின. திறமைக்கும் உழைப்புக்கும் உரிய கவனிப்பையும் மதிப்பையும் பெறாமல் இருக்கும் எழுத்தாளர்களில் கர்ணனும்