பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னன் 2:3 தமிழ்மொழிக்கான பொறுப்பாளர் 'கன்வீனர்" ஆக இருந்த நா.பார்த்தசாரதி அந்த யோசனையை ஏற்றுப் பெரிதும் முயன்று பெரிய அளவில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டிலிருந்து அசோகமித்திரன், சா. கந்தசாமி. நான் மூவரும் புதுடில்லி போனோம். கட்டுரைகள் படிப்பதற்காக டில்லியில் இருந்த வலம்புரி ஜான், முனைவர் ரவீந்திரன், வெங்கட் சாமிநாதன் மற்றும் சிலரும் கலந்து கொண்டார்கள். இதர மொழிகள் பேசும் எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். பொதுவாக, கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்கப்பட்டன. நானும், சா. கந்தசாமியும் தமிழில் வாசித்தோம். அந்த வருடம்தான் சாகித்ய அகாதமியின் 'இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் புதுமைப்பித்தன் பற்றி நான் எழுதிய நூல் வெளிவந்திருந்தது. அந்தக் கருத்தரங்குகளில் அது வெளியிடப்பட்டது. கருத்தரங்கு வெற்றிகரமாக அமைந்து எல்லோருக்கும் மனநிறைவு தந்தது. டில்லியில் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் கருத்தரங்கு பற்றி எழுதியதோடு, புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டடிருந்தது. அந்தக் கருத்தரங்கிற்காக நான். அசோகமித்திரன் சா. கந்தசாமி இருவரோடும் பயணம் செய்தேன். ரயில் பயணத்தின்போது இருவரும் அன்புடன் எனக்கு உதவினர். டில்லி சேர்ந்ததும், சா. கந்தசாமிதான் எனக்கும் தங்குவதற்கான இடவசதி தேடித்தந்தார். அவரோடு ஆறு நாட்கள் டில்லியில் தங்கினேன். நண்பர் அந்நாட்களில் காட்டிய அன்பும் செய்த உதவிகளும் மறக்கமுடியாதவை. சென்னையில் எங்களை வழிஅனுப்பிவிட்டு, நா.பா. மலேசியா போனார். அங்கு நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் டில்லி போங்கள். நான் மலேசியாவில் என் வேலையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து நேரே டில்லிக்கு வந்து சேர்வேன் என்று அவர் உறுதியாகச் சொல்லிப் போனார். ஆனால் அவரால் அப்படிச் செய்ய இயலாது போயிற்று. உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் மலேசியாவிலிருந்து சென்னைக்குத் திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. புதுடில்லியிலிருந்து திரும்பியபோதும் நான், சா. கந்தசாமி, அசோகமித்திரன் இருவரோடும் சேர்ந்தேதான் வந்தேன். பம்பாய்க்கு நான் போனதில்லை. பெங்களூருக்கு இரண்டு முறை போயிருக்கிறேன். முதல்முறை திக சிவசங்கரனுடன், டெங்களுரில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தாமரை இதழ் சார்பில் போனோம். மகாநாடு சிறப்பாக நிகழ்ந்தது. தங்குவதற்கு வசதியான ஏற்பாடுகள்