பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 வாழ்க்கைச் சுவடுகள் மகாகவி பாரதியார்கூட அவருடைய வாழ்நாளில் உரிய மதிப்பைப் பெறமுடிந்ததில்லை. அவருக்கு அடுத்த தலைமுறைகளில் வந்த கவிஞர்கள் பலரும் தங்களுடைய திறமையும் படைப்புகளும் கவனிப்பும் மதிப்பும் பெறாத பெறமுடியாத நிலையில்தான் வாழ்ந்து மறைந்தார்கள். பாரதிக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கவிஞர் பாலபாரதி சது. சுப்ரமணிய யோகியார் நல்ல கவிஞர், விருத்தப்பாக்களில் அருமையான கவிதைகளையும் மரியா மகதலேனா என்ற சிறப்பான காவியத்தையும் படைத்தவர். அவருடைய படைப்புகளின் பெருமை எத்தனை பேரால் அறிந்து கொள்ளப்பட்டிருக்கிறது? அதேபோல் கம்பதாசன் என்ற பெயரில் நல்ல கவிதைகள் புனைந்த சி.எஸ். ராஜப்பா தமிழன்பர்களால் மறக்கப்பட்டவரே. அவருடைய படைப்புகள் கவிதைவடிவில் மட்டுமல்லாமல் சிறுகதை, நாடகம், திரைப்படப் பாடல்கள் என்றெல்லாம் உருவாகி, ஒரு காலத்தில் கவனிப்புப் பெற்றிருந்தன. காலம் அவர் பெயரிலும் படைப்புகள்மீதும் மறதிப்புழுதியை அழுத்தமாகப் படியச்செய்திருந்தது. பலப்பல வருடங்களுக்குப் பிறகு சிலோன் விஜயேந்திரன் என்கிற நடிகர் திரைப்படங்களில் வாய்ப்புத்தேடி தமிழ்நாடு வந்து தங்கியவர். கம்பதாசனை நினைவுக்குக் கொண்டுவந்தார். அவரே கவிஞராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் கவிதை விமர்சகராகவும் இயங்கிக்கொண்டிருந்தார். அவர் கம்பதாசனின் பக்தராக அவரது படைப்புகளின் தீவிர ரசிகராக இருந்ததனால் கவிஞரின் படைப்புகளைத் தேடிக்கண்டெடுத்து நல்ல பதிப்புகளாக அச்சிட்டு வெளியிடும் முயற்சியில் மும்முரமாக முனைந்தார். கம்பதாசனின் வரலாற்றை எழுதினார். கம்பதாசன் கவிதைகள், கம்பதாசன் திரைப்படப்பாடல்கள், கம்பதாசன் சிறுகதைகள் என்றெல்லாம், அரும்பாடுபட்டுப் புத்தகங்கள் கொண்டுவந்தார். அவற்றுக்கு வெளியீட்டு விழாக்களும் நடத்தினார். அதற்கு அடுத்த தலைமுறையில் வந்த தமிழ்ஒளி ஆற்றல் நிறைந்த நல்ல கவிஞர். அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார். ஒரு கட்டத்தில் தி.க.சிவசங்கரன் அவருக்குப் பெரிதும் உதவிபுரிந்துள்ளார். நெது. சஞ்சீவி எனும் தொழிலாளி கவிஞரின் நண்பராய், புரவலராய், அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தார். தமிழ்ஒளியின் கவிதைகள் சொல் அழகும் பொருள் நயமும் ஒட்டமும் உயிர்த்துடிப்பும் கொண்டவை. அவற்றின் சிறப்பு உணர்ந்த கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் தமிழ்ஒளி கவிதைகளுக்குத் தமது பத்திரிகையில் முக்கிய இடம் தந்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார். தமிழ்ஒளி அகால மரணம் அடைந்தார். அவரது பெயரும் படைப்புகளும் மறக்கப்பட்டுவிட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு, கவிஞரின் வாழ்நாளில் ஓர் சடையப்ப வள்ளலாய்