பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வாழ்க்கைச் சுவடுகள் 1937 ஆம் வருட மலர் தினமணி ஆண்டு மலர் வழக்கமான சிறப்பு மலர் வடிவத்தில் கச்சிதமாக இருந்தது. உள்ளடக்கம் மிகச் சிறப்பாக விளங்கியது. புதுமைப்பித்தனின் நினைவுப்பாதை மெளனியின் "எங்கிருந்தோ வந்தான். டோன்ற சிறுகதைகள், இளங்கோவனின் சாவே வா’ என்ற ೨೧೨u787 கட்டுரை. ந. பிச்சமூர்த்தியின் பிக்ஷ கிளிக்கூண்டு கவிதை - இப்படி எவ்வளவே. திரும்பத் திரும்பப் படித்தேன். தமிழில் புதிய புத்தகங்கள் அதிகம் வரத் தொடங்கிய காலம் அது. நல்ல நூல்களைக் குறைந்த விலையில் தரவேண்டும்: பலவிதமான புத்தகங்களையும் எட்டண விலையில் விற்பனை செய்வது என்ற நோக்குடன் நவயுகப் பிரசுராலயம் லிமிட்டெட் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் முதல் வெளியீடு ஆக ஏ.என். சிவராமன் எழுதிய ‘மாகாண சுயாட்சி வந்தது. ராஜகோபாலகிருஷ்ணன் அதை வாங்கி வந்து படித்துவிட்டு, எங்களுக்குத் தந்தார். ஜெயப் பிரகாஷ் நாராயணன் நூல்களையும் அவர் வாங்கினார். ஜவகர்லால் நேரு சுயசரிதம்' வரா. தமிழாக்கம் - படிக்கக் கிடைத்தது. சுதந்திரப் போராட்ட வீரர்-உணர்ச்சிகரமான மேடைப் பிரசங்கி - நா. சோமயாஜலு சங்கரன்கோயிலில் இருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று ராஜகோபாலகிருஷ்ணன் என் அண்ணனை அழைத்துப் போனார் ஒருநாள். அண்ணா திரும்பி வந்தபோது அரிய சிற்றிதழ்கள் பலவற்றைக் கொண்டுவந்தார். இவற்றை எல்லாம் சோமயாஜலு தந்தார் என்றார். காரைக்குடியில் இருந்து வெளிவந்த ஊழியன் பத்திரிகை இதழ்கள் பல. இதில் ஒருசமயம் புதுமைப்பித்தன் பணியாற்றினார். அவருக்கும் ஊழியன் துணை ஆசிரியரான இ. சிவம் என்பவருக்கும் ஒத்துப்போகாததால், பு:பி. வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்கே போய்விட்டார். அண்ணா கொண்டு வந்த ஊழியன் இதழ்கள் பிற்காலத்தவை. ஆசிரியர் ராய சொக்கலிங்கம் எழுத்துக்களுடன், இ. சிவம் எழுதியவை மிக அதிகமாகவே காணப்பட்டன. வ.வெ.சு ஐயர் நடத்திய பாலபாரதி இதழ்கள் சில பாரதிதாசன் புதுச்சேரியில் இருந்து வெளியிட்ட சுப்பிர மணிய பாரதி கவிதா மண்டலம்' சில இதழ்கள். காஞ்சிபுரம் குமார விகடன் சில. இதில் இளங்கோவன் (ம.க. தணிகாசலம் கதைகள், கட்டுரைகள் காணப்பட்டன. மணிக்கொடி சிறுகதைப் பத்திரிகையும் காலப்போக்கில் நின்றுவிட நேர்ந்தது. 1937இல் க. நா. சுப்ரமண்யம் சூறாவளி’ என்ற பெயரில் இலக்கிய வார இதழ் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். மணிக்கொடியில் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் இந்த இதழில் எழுதுவதில் உற்சாகம் காட்டினார்கள். வசனகவிதை பற்றிய ஒரு சர்ச்சை முதன்முதலாக, சூறாவளியில் நடைபெற்றது. வேகமும் புதுமையும்