பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 41 ஊருக்கு வடக்கே பதினெட்டு மைல் துரத்தில் இருந்த மணியாச்சிக்கு அப்பால் நான் பயணம் போனதில்லை. இப்போது மதுரைபோய், பாதை மாறித் தொலைவில் உள்ள பரமக்குடி போய்ச் சேர வேண்டும். என்னால் தனியாகச் சமாளிக்க முடியாது என்று என் அண்ணா கோமதி நாயகம் துணைக்கு வந்தார். எனக்கு வேலை வாங்கித் தந்த உறவினர் மதுரையில் தான் பணிபுரிந்து கொண்டிருந்தார், நாங்கள் அவர் வீட்டில் ஒரு நாள் தங்கினோம். முதன்முதலாக மதுரை நகரைக் கண்டு களித்தோம். மறுநாள் பரமக்குடி சேர்ந்தோம். அண்ணா என்னுடன் நான்கு நாட்கள் இருந்தார். பிறகு ராஜவல்லிபுரம் திரும்பிவிட்டார். எனது தனிமை வாழ்வு இனிது தொடங்கியது. ஆபீசுக்கு அடுத்த கட்டிடத்தில் ஒரு ஒட்டல் இருந்தது. கிருஷ்ணய்யர் என்பவர், கல்லிடைக்குறிச்சிக்காரர். அதை நடத்தி வந்தார். அதில் மாதச் சாப்பாட்டுக்கு எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாதம் ஒன்பது ரூபாய் தான். காலையில் இரண்டு இட்டிலி, ஒரு பெரிய தோசை, காப்பி. மதியம் சாப்பாடு, இரவிலும் சாப்பாடு ருசிகரமாக இருந்தன எல்லாம். சில மாதங்கள் ஆபீசிலேயே தங்கினேன். ஒட்டல் மாடியில் 'ராயல் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் என ஒன்று இருந்தது. பலர் வந்து டைப் அடிக்கக் கற்றுக் கொண்டார்கள். ராமாநாதபுரத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அதை நிர்வகித்தார். நானும் டைப் கற்கச் சேர்ந்தேன். நித்தியானந்தம் நண்பரானார். ஆபீசில் தங்க வேண்டாம் தன்னுடன் இன்ஸ்டிடியூட் மாடியிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று அவர் என்னை அழைத்துக் கொண்டார். ஆபீசுக்குப் பின்பக்கத்தில் சற்று தள்ளி வைகை ஆறு. நவம்பர். டிசம்பர் மாதங்களில் தண்ணீர் நிறையவே ஓடியது. ஆகவே, வசதியான ஆற்றுக்குளிப்பு கிட்டியது. புதிதாக அமைக்கப்பட்ட ஆபீஸ் மேஜைகள், நாற்காலிகள், பெஞ்சு எல்லாம் புதியனவாக இருந்தன. கட்டிடமும் புது மெருகுடன் தான் காணப்பட்டது. மனோகரமான சூழ்நிலை. அங்கு 'அக்ரிகல்சுரல் டிமான்ஸ்ட்ரேட்டர் ஆகப் பணியாற்றியவர் ஒரு சுகவாசி. வருடத்தில் பெரும் பகுதி நாட்கள் அவர் விடுப்பில் திருமங்கலம் போய்விடுவார். அங்கே தான் அவருடைய குடும்பத்தினர் வசித்தார்கள், கேஷவல் லீவ், பிரிவிலேஜ் லீவ் லீவ் ஆன் மெடிகல் சர்டிபிகேட், லீவ் ஆன் ஆவரேஜ் பே என்று விடுப்புக்கான சலுகைகள் அனைத்தையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். மேஸ்திரி என்றும் மெசஞ்சர் என்றும் இரண்டு பணியாளர்கள் உண்டு. மாதத்தில் இருபது நாட்கள் அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குப் போய்