பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் நண்பர் திக சிவசங்கரனும் புதிய புத்தகங்கள் வாங்கிப் படிப்பதில் - 1. அவர் வாங்கிய புத்தகங்களை எங்களுக்குப் படிக்கத் சுபாஷ் சந்திரபோசின் இளைஞன் கனவு. மழையும் புயலும் போன்ற நூல்கள் அவர் பெரிய அண்ணாச்சி கலியாண சுந்தரத்துக்கு அறிமுகமான ஒரு போலீஸ்காரர் வள்ளிநாயகம் என்று பெயர்- தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார். சங்க இலக்கியங்கள் சம்பந்தமான புத்தகங்கள், திரு.வி. கலியாணசுந்தரமுதலியார் நூல்கள் முதலியவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றைப் படிக்கத் தந்து உதவினார். சக்தி' என்ற மாதப் பத்திரிகை தனித் தன்மையோடு, சிறப்பாக வந்துகொண்டிருந்தது. அதன் நிர்வாக ஆசிரியரான வை. கோவிந்தன் நல்ல நோக்கமும் உயர்ந்த கொள்கைகளும் கொண்ட இலட்சியவாதி. தமிழில் உயர்ரகமான நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆசையோடு அவர் சக்தி பிரசுரம் ஆரம்பித்து நடத்தினார். பெங்குவின் புக்ஸ்' எனும் வெளியீடுகள் அக்காலத்தில் ஆறணா விலையில் நல்ல புனைகதை இலக்கியங்களை ஃபிக்ஷன் விற்பனை செய்தது. அறிவியல் நூல்கள் விஞ்ஞானம், தத்துவம், அரசியல் முதலியவை - 'பெலிக்கன் புக்ஸ்' என்ற பெயரில் பிரசுரம் பெற்றன. சக்தி புத்தகங்களும் அதே மாதிரி விளங்கவேண்டும் என்று வை. கோவிந்தன் விரும்பினார். அவ்விதமே நூல்கள் வெளியிடலானார். புத்தக வெளியீட்டுடன் ரீடர்ஸ் டைஜஸ்ட் பாணியில் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. அதனால் 'சக்தி மாத இதழைத் தொடங்கினார். ஆரம்பத்தில் டைம்' பத்திரிகை மாதிரியான அளவும் அட்டை அமைப்டம் கொண்டு அந்த இதழ் வந்தது. சுத்தானந்த பாரதியார் இதழ் பொறுப்பைக் கவனித்துவந்தார் சிறிது காலத்துக்குப் பின்னர், தி.ஜ.ர. திஜரங்கநாதன் அதன் ஆசிரியரானார். சக்தி புதிய அளவும் புதுப்பொலிவும் உள்ளடக்க மாற்றங்களும் பெற்று வளரலாயிற்று. 'சக்தி இதழைப் பரவலாகத் தெரியச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். முன்பணம் இல்லாது, பத்துப்பிரதிகள் அனுப்பிவைத்தால், அவற்றை விற்று உடனே பணம் அனுப்பிவிட இயலும் என்று சக்தி' காரியாலயத்துக்கு எழுதினேன். சு. நாராயணன் என்ற அன்பர் அங்கு விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் என் எழுத்துக்களிலும் எனது தமிழ் நடையிலும் வியப்பும் மதிப்பும் வைத்திருந்தார். என் வேண்டுகோளை ஏற்று