பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53 அவர் மாதம் தோறும் பிரதிகள் அனுப்பினார். அவை விற்பனையானதும் உடனே பணத்தை அலுவலத்துக்கு அனுப்பிவைத்தோம். இலக்கிய நண்பர்கள் 'சக்தி'யை விரும்பிப் படித்தார்கள். அதனால் அதன் விற்பனை அதிகரித்து 25-30 பிரதிகள் என்று உயர்ந்து மாதம் ஐம்பது பிரதிகள் விற்பனையாகும் நிலை ஏற்பட்டது. சக்தி அலுவலகம் முன்பணம் கேட்காமலே அதிகப்படியான பிரதிகளை அனுப்பி உதவியது. நான் திருநெல்வேலிக்கு வந்து ஒரு வருடம் நிறைவு பெறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் வெளியூர் சென்று - முக்கியமாக, சென்னை சேர்ந்து - வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் பத்திரிகை உலக நண்பர்களுக்கு என் ஆசையைத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதினேன். 'சினிமா உலகம்' பத்திரிகைக்கே ஒரு உதவி ஆசிரியர் தேவைப்படுகிறது. சிறிது காலம் பொறுத்திருங்கள். நானே உங்களை அழைத்துக்கொள்வேன் என்று கோவையில் இருந்து சினிமா உலகம் ஆசிரியர் பண்டிட் பி.எஸ். செட்டியார் கடிதம் எழுதினார். சென்னையிலிருந்து நவசக்தி ஆசிரியர் சக்திதாசன் சுப்பிரமணியம் உற்சாகமாக எழுதியிருந்தார். 'நவசக்தியே உங்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமாகவிருக்கிறாள். ஆனால் இப்போது சந்தர்ப்பங்கள் சரியாகயில்லை. யுத்தகால நெருக்கடிகள் சிரமங்கள் நீடிக்கின்றன. மக்கள்குடும்பம் குடும்பமாகச் சென்னையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகள் கூட வெளியிடங்களுக்கு இடம் மாறிவிட்டன. வை.மு. கோதைநாயகியின் 'ஜகன் மோகினி சிங்கப் பெருமாள் கோவிலுக்குப் போய்விட்டது. சக்தி காரியாலயம் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இப்படி அநேகம். இந்த நிலையில் நான் உங்களைச் சென்னைக்கு அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் சென்னையிலேயேதான் இருப்பேன். 'நவசக்தி'யும் சென்னையிலிருந்தே வெளியாகும். ஒண்டியண்டி குண்டுவிட்டு உயிர்பறித்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் திருநெல்வேலியிலேயே தங்கியிருங்கள். கவலைப்பட வேண்டாம் காலம் வரட்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். கிடைத்திருந்த சர்க்கார் வேலையை விட்டுப்போட்டு, சும்மா வீட்டோடு இருந்து வெட்டிப்பொழுது போக்கிக்கொண்டு இருக்கிறானே என்று உறவினரில் சிலர் குறை கூறினார்கள். இனிமேல் என்ன பண்ணப்போகிறானாம் என்று அநேகர் குறிப்பிட்டார்கள். இந்த எண்ணம் என் அம்மாவுக்கும் இருந்தது. படித்தும் புத்திகெட்டுப் போன பிள்ளை என்ற மனவருத்தம் அம்மாவுக்கு. ஆயினும் என் அண்ணா கோமதிநாயகம் வருத்தப்படவுமில்லை, குறை கூறவுமில்லை. எனது எழுத்துமுயற்சிகளைப் படித்து ரசித்துஎனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கத் தவறவுமில்லை.