பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ア5 அவரை அழைத்தார்கள். உடனே அவர் சரி, நான் வாறேன். சும்மா தான் வந்தேன்' என்று கூறிவிட்டு வெளியேறினார். அங்கு நின்று அவரை அழைத்தது யார், அவர் யாருடன் சென்றார் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. இருட்டில் ஒன்றும் தெரியவுமில்லை. சிறிது நேரம் சென்றதும் ஓர் ஆள் வந்து,'ஆச்சி உங்களைக் கூப்பிடுறாக என்றார். எந்த ஆச்சி என்று நான் அறியாமையோடு கேட்டேன். செட்டியார் சம்சாரம் என்று அவன் மெதுவாகச் சென்னான். செட்டிநாட்டில், சாதாரணமாக பெண்கள் ஆச்சி என அழைக்கப்படுவது வழக்கம் என்பது நான் அறிந்திராதது. திருநெல்வேலிப் பக்கம் வயது முதிர்ந்தவர்களை, பாட்டிமாரைத்தான் ஆச்சி என்று குறிப்பிடுவார்கள். வேலைக்காரர்கள், தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் பெரிய வீட்டு'ப் பெண்களைஉயர்மட்டத்தினரை ஆச்சி என்று குறிப்பிடுவார்கள். வயது குறைந்தவர்களைக் கூட சின்ன ஆச்சி என மரியாதையாக அழைப்பார்கள். வந்தவனிடம் "எதற்காக?' என்று கேட்டேன். செட்டியார் வீட்டில் எவரையும் நான் அதுவரை பார்த்ததில்லை. கையோடு கூட்டி வரச் சொன்னாக' என்று அவன் அவசரப்படுத்தினான். உடன் சென்றேன். ஓர் இளம் பெண். வாயில் வெற்றிலையை ஒதுக்கிக் கொண்டு, பெரிய இடத்துப் பெண் என்ற மிடுக்குடன் காணப்பட்டாள். அமைதியின்றி அறையில் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதுமே, உங்க செட்டியாரைத் தேடி யார் வந்தது? என்று கேட்டாள். "யாரும் வரலியே' என்றேன். 'பொய் சொல்ல வேண்டாம். கோகர்ணத்துக்காரி அங்கே வரலே?" 'யாருமே வரலே. செட்டியார்தான் வந்தார். என்னோடு சிறிது பேசிக்கொண்டிருந்தார்' என்றேன். 'உங்க செட்டியாரைப் பாதுகாக்கணும்கிறதுக்காக மூடி மறைக்க வேண்டாம். செட்டியார் கூட ஒரு பொம்பிளை வரலே?" 'ஒருத்தரும் வரலே செட்டியார் மட்டும் தான் வந்தார்.' வெளியே நின்றாளா? 'அது எனக்குத் தெரியாது. நல்ல இருட்டு வெளியே யாரும் நின்றால் கூட அது தெரியாது. 'உம் செட்டியாரைத் தேடி பொம்பிளைக வருவாக, அப்படி யாராவது வந்தா எனக்குத் தெரியப்படுத்தணும். இப்ப நீங்க போகலாம் என்று என்னை அனுப்பிவைத்தாள்.