பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 97 ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதற்கு கேராமநாதன் உதவினார். "யுனிவர்சிட்டி லைபிரரியில் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். ஒரு நண்பர் கார்டு வைத்திருக்கிறார். அவர் அதை உபயோகிப்பதில்லை. நான் அந்தக் கார்டை வாங்கித் தருகிறேன். நீங்கள் ரஷ்ய இலக்கியங்களை எடுத்துவந்து படிக்கலாம் என்றார். * அதன்படியே டி செஞ்சையா என்பவரின் லைபிரரி கார்டை வாங்கி வந்து தந்தார். நான் யூனிவர்சிட்டி லைபிரரிக்குப் போய், டாஸ்டாவ்ஸ்கியின் க்ரைம் அன்ட் பனிஷ்மென்ட் நாவலை எடுத்துவந்து வடித்தேன். அடுத்து, இவான் துர்கனேவ் நாவல்களைத் தேடி எடுத்தேன். நான்காவதாக, புஷ்கின் படைப்பு ஒன்றை எடுத்து வந்தேன். 'நீங்கள் தான் டி. செஞ்சையாவா? என்று நூலகர் கேட்டார். இல்லை, அவருக்காக நான் புத்தகம் எடுத்துப் போகிறேன்' என்றேன். 'அப்படியானால் அடுத்தமுறை செஞ்சையாவிடமிருந்து கடிதம் வாங்கி வரவேண்டும் என்று நூலகர் தெரிவித்தார். நான் இவ்விவரத்தை ராமநாதனிடம் கூறினேன். "சிரமம் எதுவுமில்லை. செஞ்வையாவிடமிருந்து நான் கடிதம் வாங்கித் தருகிறேன்' என்றார் நண்பர். வாங்கித் தந்தார். இந்தக் கடிதம் கொண்டு வருபவரிடம் எனது கார்டுக்கு லைபிரரி புத்தகங்கள் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று பொதுப்படையாக அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நூலகர் இரண்டு முறை எதுவும் சொல்லவில்லை. நான் போலண்ட் சிறுகதைகள், ரஷ்யச் சிறுகதைகள் புத்தகங்களை எடுத்தேன். அம்முறை நூலகர் குறுக்கிட்டார். டி. செஞ்சையாதான் இந்தப் புத்தகங்களை எடுத்துவரச் சொன்னாரா?' என்று கேட்டார். இல்லை என்றேன். 'இனிமேல் ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட இன்ன புத்தகம் வேண்டும் என்று செஞ்சையாவிடமிருந்து கடிதம் வாங்கி வரவேண்டும். அப்பதான் புத்தகம் தரமுடியும் என்று அவர் உறுதியாகச் சொன்னார். இதையும் நான் ராமநாதனிடம் கூறினேன். 'கொடுக்காவிட்டால் போகட்டும் தொடர்ந்து ரஷ்ய ஆசிரியர்களின் புத்தகங்களையே எடுப்பதால், நாம ஏதோ புரட்சிக்கு ஆயத்தம் செய்கிறோம் என்று அந்த ஆள் எண்ணிவிட்டார் போலிருக்கு' என்று சொல்லிச் சிரித்தார் நண்பர்.