பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& வாழ்க்கைச் சுவடுகள் எடுத்து வந்த புத்தகத்தைப் படித்து விட்டுத் திருப்பிக் கொடுத்ததோடு லைபிரரித் தொடர்பு முற்றுப் பெற்றது. விதிகள், கட்டுப்பாடுகள் என்றெல்லாம் வைத்துக் கொண்டு, படிக்க விரும்புகிறவனின் ஆசைக்குத் தடைபோடுகிற லைபிரரிகளின் உதவியை இனி நாடிப் போவதில்லை. நான் படிக்க ஆசைப்படுகிற புத்தகங்களைப் புதுசுடதுசாக நானே விலைக்கு வாங்கிப் படித்துக் கொள்வேன். இப்படி என் மனம் உறுதிபூண்டது. யுனிவர்சிட்டி லைபிரரிக்குப் போய்ப்புத்தகம் எடுத்துக்கொண்டு திரும்புகிற ஒவ்வொரு தடவையும் நான் திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடு சென்று ஜோதி நிலையத்தில் அ.கி. ஜயராமனுடன் பேசிக்கொண்டிருப்பதை வழக்கமாக்கினேன். அவ்வேளைகளில் அங்கு வரக்கூடிய எழுத்தாளர்கள் சிலரின் அறிமுகம் கிட்டியது. ந. சிதம்பரசுப்ரமணியம் அப்படித்தான் அறிமுகமானார். சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு அழகான சிறுகதைகள் பலவற்றை எழுதியிருந்தார் அவர் பிற்காலத்தில் இதயநாதம் என்கிற நல்ல நாவலை எழுதியவர். மணிக்கொடி பத்திரிகை நடந்த காலத்தில் மணிக்கொடிக்கு அவ்வப்போது பணஉதவி செய்தவர்அவர் என்று மணிக்கொடி வரலாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு தடவை. ப. ராமஸ்வாமியைச் சந்திக்க நேர்ந்தது. பி.எஸ். ராமையா கால மணிக்கொடிக்குப் பிறகு, மணிக்கொடி ஆசிரியப் பொறுப்பை ஏற்று பத்திரிகையைத் தொடர்ந்து சிறிது காலம் நடத்தியவர் அவர் பரா என்று அறியப்பட்ட அவர் திருநெல்வேலிக்காரர். மைக்கேல் காலின்ஸ், சீனா முதலிய புத்தகங்களை எழுதி, அவற்றை நவயுகப்பிரசுராலய வெளியீடுகளாக அவர் கொண்டு வந்திருந்தார். அந்த லிமிட்டெட் நிறுவனத்தைப் பொறுப்பாகக் கவனித்து வந்தவரும் அவரே. சினிமா உலகம் பொங்கல் மலருக்கு விளம்பரங்கள் சேகரிக்க சென்னை வந்த பி.எஸ். செட்டியார் ஒருநாள் நவசக்தி அலுவலகத்துக்கு என்னைத் தேடிவந்தார். அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு கிளம்பினார். - காலை நேரம் ஓர் ஒட்டலில் பூரி கிழங்கு காபி சாப்பிட்டோம். நீங்கள் ஊருக்குப் போறதா சொல்லிவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டது எங்களுக்கெல்லாம் வருத்தம் தந்தது. அப்படி புறப்படுகிற அன்று கூட ராத்திரி 10 மணி வரை விழித்திருந்து கடிதங்கள் எழுதி டைப் பண்ணி, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு வந்ததைப் பற்றி வீட்டிலே அடிக்கடி சொல்லுவாங்க. நீங்கள் நான் சென்னைக்குப் போக வேண்டும் என்று என்னிடம் நேரடியாகவே சொல்லியிருக்கலாம். அப்படிச் சொன்னால் நான்