பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


இந்த இளமைக் காலத்திலே ஒரு சிலருக்கு இன்பம் கிடைக்கலாம். வேறு சிலர் வாழ்வு துன்பமயமாகவே கூட. தொடரலாம். என்ருலும், வானிலே தோன்றி மறையும் வால் நட்சத்திரம் போலவே தான். வாழ்விலே இளமை வந்து போகிறது. - தீராத் துன்பத்தைத் தரும் வறுமையுடன் போராடும் வாழ்வு இயற்கையானது தான் என்ருலும், மிகக் கொடியது. வறுமை என்று ஒளவைப் பாட்டிப் பாடுகிருள். பாருங்கள்! கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை’ என்பது. நீரில்லாக் குளத்தை நம்பி வாழும் நெற்பயிர்கள், நீரின்றி சாகும். சீர்தரும்கல்வி இல்லாவிட்டால், செழுமைப் பண்புகள் குலையும். அதுபோலவே, வறுமையால் வளமான இளமையும் சாகும் என்பதாக பழந்தமிழ்ப் பாடல் ஒன்று. கூறுகிறது. - இளமையில் நலிந்த உடல் இருந்தால், எதிர்சாலம் என்ன ஆவது? நஞ்சை வயலில் நட்டால் நல்ல மகசூலே எதிர்பார்க்கலாம். களர்நிலத்தில் விதைத்து விட்டு விளைவுக் காகக் காத்திருந்தால் எப்படி? அப்படித்தான் வாழ்வும்: அமையும், - மொட்டு அரும்பாகி, போதாகி, மலராக விரிந்து மணம் பரப்புவது போல, தொடங்கி, தொடர்ந்து, எழுந்து உச்சக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும் நாடக உச்ச நிலை (Climax) போல, மெதுவாக எழும்பி, இனிமையை எழுப்பிக் கொண்டே வந்து உச்சஸ்தாயியை அடையும் இசைபோல. உடலில் இளமை வருகிறது. வளர்கிறது.