பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. விளையாடும் காலம்! “வளமையோடு ஒக்கும் வனப்பில்லை, எண்ணின் இளமையோடு ஒப்பதும் இல்’ என்று நான்மணிக்கடிகை நவில்கிறது. இளமைக்கு இணையென்று கூற, எடுத்துக்காட்டிட இவ் வுலகில் எதுவுமே இல்லை என்று எல்லா அறிஞர்களுமே ஒரே முடிவாகக் கூறுகின்றனர். எல்லாம் வல்ல இறைவனுக்கும் விளக்கம் கூறவந்த பக்தர்கள், நால்வகைக் பண்புகளைக் கூறுவார்கள். அவற்றிலே ஒரு பண்பு இளமை என்பது. அதனை மிக அழகாக மூவா இள கலம் என்பதாக அனுப வித்துக் கூறுவார்கள். முதிராத இளமை நலமானது இறைவனுக்கு மட்டுமே உண்டு, ஆனால். மனிதருக்கோ...இளமை வரும்... இனிமை தரும், இருக்கும்... எழிலை இறைக்கும். பின்னர்... வந்த சுவடு தெரியாமல் முதுமைக்குள்ளே மறைந்துகொள்ளும், ஆமாம். மறைந்தது-மறைந்ததுதான்...பிறகு, நினைவுக்குக் கூட அகப்படாமல் நெகிழ்ந்து நழுவிக் கொள்ளும். - அந்த இளமைக் காலத்தில் பெறுகின்ற நலமும் வளமும் தான், அவனது வாழ்வுக் காலம் வரை நிலைக்கும். நினைக்குந் தோறும் நீங்கா இனிமையை அளிக்கும்.