பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


கேரம், சதுரங்கம், சீட்டாட்டம் போன்றவைகள் அறிவியக்க ஆட்டத்திற்கு உதாரணங்களாகும். உடல் உறுப்புக்கள் குறைந்த அங்கதlனர், விணே பொழுதினைக் கழிக்காமல் ஓய்வும் அமைதியும் பெற, அறிவியக்க ஆட்டங்கள் பயன்படுகின்றன. பொதுமையை வளர்க்க. அதே நேரத்தில் திறமையை வளர்க்க இந்த விளையாட்டுக்கள் வழிகாட்டுகின்றன. சிந்தனையுடன் செயல் படவும், நிதானத்துடன் நிலை குலையாமல் நின்று பணியாற்றவும்,பொறுமையாகக் காரியங் களைப் புரிந்து கொள்ளவும், இக்கட்டான நேர்ங்களில் எப்படி நிலைமையை சமாளிப்பது என்பன போன்ற அரிய பண்புகளை, அறிவியக்க விளையாட்டுக்கள் பலவாரு கப் பிரிந்து நின்ருலும், மனித வாழ்க்கையை மகிமைப்படுத்தும். புனிதப்படுத்தும் ஒப்பற்ற நோக்கத்துடனேயே உதவி வருகின்றன. வளர்கின்ற பயிருக்கு நீராக, சூரிய ஒளியாக, வேலி யாக, அதேபோல் வாழ்கின்ற மனிதருக்கு விளே யாட்டுக்கள் உதவுகின்றன. உடலை ஒரிடத்தில் அமர்த்தியும், அமர்ந்த இடத்திலே ஐம்புலன்களுக்கு அதிக வேலை கொடுத்தும் மகிழ்விக்கின்ற சக்தி விளையாட்டுகளுக்கே அதிகம் உண்டு. அத்தகைய விளையாட்டை ஆடிப் பயன் பெறும் காலமும் உண்டு. நேரமும் உண்டு. நோக்கத்தை நடை முறைக்குக் கொண்டு வரும் நுண்ணிய செயலாற்றல்களை எவ்வாறு தொடர்வது என்று இனி வரும் பகுதிகளில் காண்போம். -