பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


வானெலியில் கேட்டும், அதைப் பற்றியே பேசியும் போன்ற உணர்வுகளில் உற்சாகம் காண்பதை நாம் இன்றும் காண்கிருேமே! கால்பந்தாட்டப் போட்டியைக் காணும் ரசிகர், ஆட்டத்தில் ஒன்றிப் போய், தன்னை மறந்து, முன்னல் உட்கார்ந்திருப்பவரை எட்டி உதைத்து வருந்துகின்ற காட்சியையும் நாம் கண்ட காட்சி தானே! பந்து ஒடும்பொழுது கண்கள் பந்துடனே ஒடுகின்றன. பந்து மேலே பறக்கும்பொழுது, பந்துடன் எண்ணமும், மேலே பறக்கிறது. எண்ண உணர்வுகள் இன்பத்தில் திளேக் கையில், துன்பம் தரும் உணர்வுகள் தொலைந்தே போய் புலன்களைக் காப்பதால் பேரின்பம்தான். பெருந் துயர்கள் பிறந்திடாமல் தடுக்கலாம். அதற்காகத் தான் விளையாட்டுக்கள் உதவுகின்றன. புலன்கள் அனைத்தையும் ஒரே தி யில், ஒரே வழியில், ஒரே சிந்தனையில் ஈடுபடுத்தி உவகையளிக்க, உற்சாகமளிக்க புத்துணர்ச்சி ஊட்ட புலன் உணர்வு விளையாட்டுக்கள் பெரிதும் துணை வருகின்றன. 3. அறிவியக்க விளையாட்டு முக்கியமான மூனக்கு அதிகம் வேலை கொடுத்து ஆடும் விளையாட்டே அறிவியக்க விளையாட்டாகும். இதனே உடல் வலுவுள்ளவர்கள் மட்டுமன்றி, உடல் வலுவில்லாத அதாவது ஒடி ஆட முடியாதவர்கள் கூட விரும்பி ஆடக் கூடிய விளையாட்டுக்களே அறிவியக்க விளையாட்டுக் களாகும்.