பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 04 வழிகாட்ட வேண்டிய பெரியவர்கள் விடை கூறி விட்டு போய் பின்னல் நிற்கும் வேளையிலும், வழியைக் காட்டி, வாழ்வைக் காண்பிக்கும் வளமான அனுபவங்களுடன் கூட தொடர்ந்து வருவது விளையாட்டுக்கள்தான். ஆடிக் கறக்கின்ற மாட்டை ஆடிக்கற! பாடிக் கறக் கறக்கின்ற மாட்டைப் பாடிக்கற' என்பது ஒரு பழமொழி. அது போலவே, யாருக்கு எந்த வேலையில் விருப்பம் உண்டு, என்பதை உணர்ந்து அதில் ஈடுபடுத்துவதே சரியான வழி முறையாகும். - விளேயாட்டை விரும்பாத இளைஞர்கள், மிகமிகக் குறை வான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அவர்களிலும் போதுமான உணவு வசதியின்றி பற்ருக் குறையால் வாழ் பவர்களாக பலர் இருக்கலாம். அல்லது கண்டதை உண்டு விட்டு, இண்டு தேடி உறங்கும் வசதி படைத் தவாகளாகவும் இருக்கலாம். அல்லது நோயே நிழலாக வந்து நெருக்கித் துன்புறுத்தும் நிலையில் வாழ்பவர்களாகவும் இருக்கலாம். ஆளுல், பொதுவாகவே, நடக்க முடிந்து, உடல் இயக்கத் திற்கு முடியும் என்ற அளவு உடல் நலம் உடைய எவனும் விளையாட்டைக் கட்டாயம் விரும்புகிருன் என்பது மட்டும் வெள்ளிடைமலையாக விளங்குகிறது. விளையாட்டின் தொடர்பால் உலகம் தெரிகிறது. உலக வாழ்க்கையும் உன்னதமும் உயர்வும் புரிகிறது. அதனல் பங்கு பெறுபவன் தன்னையே புரிந்து கொள்ளும் நிலைக்கு உருவாக்கப்படுகிருன் இ தளுல்தான் ஒரு மேல் நாட்டறிஞர் கூறுகிருர் என்னிடம் நாற்பது பையன்களை விளையாட்டு அரங்கத்திற்குள் வந்து தாருங்கள் அவர்களுக்கு இந்த உலகம் இன்னதென்று நான் காட்டுகிறேன்.”