பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


விளை என்னும் சொல்லுக்கு விருப்பம் என்றும், ஆட்டு என்பதற்கு ஆட்டுதல் இயக்குதல் என்றும் பொருள் கூறு வார்கள். ஆகவே எந்நாளும் இனித்து, எல்லாரையும் கவர்கின்ற விளையாட்டை விளையாடி மகிழ மட்டுமல்ல, விளையாட்டுக்களினல் பெறுகின்ற பெறும் பயன்களை நிறையப் பெற்று, வளர்த்து, வாழ்நாள் முழுதும் வளமாக வாழவேண்டும் என்பதாலும் தான். இளமைக் காலத்தில் அவர்கள் உடல்களில் விளைந் திருக்கும் புதிய வலிமை, புதிய ஆற்றல், புதிய எண்ணம் எல்லாம் இளைஞர்களே ஒரு புது உலகிற் கே இட்டுச் சல்லும் சக்திபடைத்த வயாக வினங்குகின்றன. அந்த புதிய நிலையில் அவர்களுக்கு அவர்களே இன்னரென்று சுட்டிக் காட்டி, அவர்தம் இல்லத்தின் நிலைமையை காட்டி, அவர்கள் இல்லங்கள் இணைந்திருக்கின்ற சமுதாயத்தைக் காட்டி, நல்லதோர் நிலைக் கு அழைத்துச் செல்ல வே விளையாட்டுக் கள் உதவுகின்றன. தோளுக்கு மேலே போனல் பிள்ளையையும் தோழன் என்பார்கள் நம் முன்னேர்கள். அதனல், பிள்ளை யின் விருப்பம்போல் விட்டு விடவேண்டும். அவனுக்குத் தெரி பாது தா என்ன? என்று அவன் மேலேயே பாரத்தைப் பாட்டு விட்டு, தூரத்தே நின்று பார்த்துக் கொண்டிருக் கும் பெற்றேர்கள் தான் நம் நாட்டிலே அதிகம். பிள்ளைகளைக் கண்டிக்கும் சக்தியற்று. தண்டிக்கவும் இயலாது போய், அடங்காத அவர்கள் எக்கோலமாவது போய் தொலையட்டும் என்று சபித்து விட்டு, மனதில் உறுத்தலுடன் உலவிக் கொண்டிருக்கும் பெற் ருர்களும் உண்டு.