பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


காட்டாற்று வெள்ளம் போன்ற இளமைக்கு அணையாக, ஆற்றலை வளர்க்கும் துணையாக விளையாட்டுக்களே உதவு கின்றன. பாய்ந்து வரும் வெள்ளத்தைப் பத்திரமாகத் தடுத்திடா விட்டால், ஊரையே பாழடித்துவிடும். இளமை சக்தியும் இது போன்றதுதான். அத்தகைய வீரியம் வாய்ந்த வாலிபப் பருவத்தினக் கட்டிச் காக்கவும் கனிவிளையும் தருவாக உருவாக்கிக் காட்டவும் விளையாட்டுக்களில் வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எது நல்ல எது கெட்டது என்று புரியாத கல்லா இளமைக் காலத்தினைக் கணிய வைக்கின்ற சக்தி, விளை - • , - o * ټيي r :ي & - - み - பாட்டுகளுக்கு மடடுமே ఒత్రి அதனுல் தான் விளையாடும் காலம் இள ைமக் காலம் என்கிருேம், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி. மூங்கிலேயும் பசுமையாக இருக்கும் பொழுது தான் தேவைக்கு ஏற்ப வளைக்கலாம். முற்றி விட்டால் முறியுமே தவிர வளையாது. அது போலவே, இளமைக் காலத்தில்தான் எல்லா விதமான பண்புகளையும், அன்பு நெறிகளையும் ஏற்ற முடியும் ஊட்ட முடியும். மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முக்னே கசக்கும். பின்னே இனிக்கும்’ என்பார்கள். முன்னே இனிப்பது பின்னல் கசக்கலாம். முன்னுல் கசப்பது பின்னல் இனிக்கலாம். ஆனல் விளையாட்டோ முன்னும் இனிக்கும். பின்னும் இனிக்கும்.எந்நாளும் இனிக்கின்ற பண்பினுல்தான் அது விளையாட்டு என்றே பெயர் பெற்றிருக்கிறது.